கொழும்பு பங்குச் சந்தை நிறுவனமொன்றின் முதல்தடவையாக பௌத்தபிக்கு நியமனம் - நியாயப்படுத்தும் ரவி
நிறுவனமொன்றின் பணிப்பாளராக பௌத்த பிக்கு ஒருவர் கடமையாற்றுவதில் என்ன தவறென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கமான தீனியாவெல பாலித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவரை பணிப்பாளர் சபையில் உள்வாங்கப்பட்டமைக்கு சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் பௌத்த பிக்கு ஒருவர் பணிப்பாளராக கடமையாற்றுவதில் எவ்வித பிழையும் கிடையாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக முதல் தடவையாக பௌத்த பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஓர் சாதனையாகவே கருதப்பட வேண்டும் இந்த அரசாங்கம் சாதனைகளைச் செய்யும் அரசாங்கமாகும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீனியாவல பாலித தேரர் மஹாபோதி அமைப்பின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கடமையாற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment