Header Ads



கடும் நிபந்தனையுடன் விமலின் மனைவிக்கு பிணை - சுகம் விசாரிக்க சென்றார் மகிந்த

கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசீ வீரவன்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதேநேரம் அவர் விசாரணைகளுக்காக ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமையும், முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரையான காலப்பகுதியில் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை மீறப்பட்டு, சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நீதவான் இதன்போது, எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நீதிமன்ற வளாகத்திற்கு பிரவேசித்திருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில், அரசியல் கூட்டங்களில் உரையாற்றுவதை போல உரையாற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமைக்காக அவர் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர், சசீ வீரவன்ச, சுகயீனம் காரணமாக, மீண்டும் ஒருமுறை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சுகநலன்களை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய மருத்துவமனைக்கு சென்றள்ளார்.

1 comment:

  1. இவர்களுக்கெல்லாம் கைது செய்யப்பட்டதும் எப்படித்தான் சுகயீனம் வருகின்றதோ தெரியவில்லை..

    அது ஒருபுறமிருக்க, திரு. மகிந்த ராஜபக்ஷ சுகம் விசாரிப்பவர்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்களே..?

    ReplyDelete

Powered by Blogger.