'பல்டி அடிப்பதை தடுக்க' பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யும்சட்டம் வருகிறது
கட்சித் தாவலை தடுக்க விசேட சட்ட மூலமொன்றை கொண்டு வர புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழு ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சித் தாவினால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அரசியல் சாசன சட்டத் திருத்தங்களின் போது இந்த விடயமும் உள்ளடக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி செயற்படுவார் எனவும், பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் உச்ச வரம்பு எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளது.
பாராளுமன்றின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்கள் மீள நிறுவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment