Header Ads



மகிந்தவின் மகனுடைய, தொலைக்காட்சி மூடப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியுடன் மூடிவிட அதன் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் இழப்பீட்டு தொகையுடன் நிறுவனத்தில் இருந்து விலகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய சில அதிகாரிகளுக்கு கடந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் பல குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

1 comment:

  1. வேறுவழி..?

    பொதுமக்கள் பணத்தில் யானைக்கன்றுகளை வளர்த்து வந்த கோத்தா சித்தப்பா, ஆட்சிமாறியதில் இனிமேல் அதற்கெல்லாம் சொந்தப்பணம் செலவாகுமென்றதும் அவற்றை பின்னவல சரணாலயத்திற்கு கொண்டு விட்டார்.

    இப்போது அவரது பெறா மகன் யோசித (வரிகட்டுவதற்குப் பயந்துபோய்) யோசித்துப் பார்த்து தொலைக்காட்சியை மூடுகின்றார்.

    குடும்பமே கடைத்தேங்காயைத் திருடி வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவந்தால் இப்படித்தான் ஆகும்.

    ReplyDelete

Powered by Blogger.