சிங்கம் நரியானது - முன்னாள் அமைச்சர் வேதனை
அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் சிங்கம் போல் கையெழுத்திட்டவர்கள் இன்று நரியாக அடங்கி விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம விசனம் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணையில் எத்தனை அங்கத்தவர்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்ட போதிலும் இந்த பிரேரணை தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் எந்த நம்பிக்கையில் இப்படி நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 114 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்ததுடன், குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பி்டத்தக்கது.

Post a Comment