Header Ads



பௌத்த பிக்குகளுடன், ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு (வீடியோ)

நல்லாட்சிக்காக முன் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க முனையும் முயற்சிகளுக்கு அடிபணிய போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுடன் அலரி மாளிகையில் இன்று 24-02-2015 இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

யார் என்ன சொன்னாலும், திறந்த சமூகமே காணப்படுகின்றது. இன்று குடும்ப நிர்வாகம் ஒன்று இல்லாது போயுள்ளது. அந்த அரசர் நிர்வாகத்தை நாங்கள் இல்லாது அழித்துள்ளோம்.

நல்லாட்சி ஊடாக எதிர்வரும் தேர்தலுக்கு சென்று அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும். எனினும், சிலர் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.