பொதுபல சேனா முஸ்லிம்களை தொந்தரவு செய்தபோது, உதவ யாரும் இருக்கவில்லை - தயாசிறி ஜயசேகர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றி சுதந்திரக் கட்சியின் முன்னோக்கி செல்ல முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை. மைத்திரிபால சிறிசேனவின் நற்குணத்திற்கே மக்கள் வாக்களித்தனர். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சரவையை அமைத்து கொண்டு பிரதமராகியுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு பாரிய தொந்தரவுகளை கொடுத்த போது அவர்களுக்கு உதவ யாரும் இருக்கவில்லை.
அளுத்கம சம்பவம் நடைபெற்ற பின்னர் முஸ்லிம் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். தமக்கு உதவாத இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டிய தேவை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டது.
தேர்தலில் நிறுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சியில் தலைவர்கள் இருக்கவில்லை. தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக தயா கமகே கேட்டிருந்தார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க, சிந்தித்து பார்த்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சிறந்த வேட்பாளரை வாடகைக்கு அமர்த்தி கொண்டார். அது சிறந்த தீர்மானம்.
சிங்கள பௌத்த வாக்கு வங்கி ஏன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நடு பகலில் சிரச தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தினர். தேசிய ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து சண்டையிட்டனர்.
றிசார்ட் பதியூதீன் நீதிமன்றத்தின் மீது கல் எறிந்தார். இவற்றை மக்கள் பார்த்தனர். இவற்று பாடம் கற்பிற்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. முடிவில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
sa
ReplyDelete