Header Ads



'அல்லாஹ்வுக்காக, தயவுசெய்து இதை நிறுத்துங்கள்..'

-Salih Zeyad-

உங்கள் சகோதரர்களையும் பாவம் செய்ய தூண்டாதீர்கள். ”மறுமை நாளில் நீங்கள் வீனடிக்கும் ஒவ்வொரு வினாடிகளைப்பற்றியும் விசாரிக்கப்படுவீர்கள்”

இனையத்தளத்தில் உலாவரும் கனவன் மனைவி என்ற பெயரில் வரும் செய்தியை பரப்புவதை அல்லாஹ்வுக்காக வேண்டி தயவு செய்து நிறுத்துங்கள்  நீங்கள் புகைப்பட்த்துடன் இட்ட பதிவுகளை இன்றே அகற்றி விடுங்கள் 

என்றாலும் அந்த பாவச் செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  உங்களால் எடுக்க முடியுமானால் கலாச்சார சீர்கேடு என்ற வகையில் சட்ட ஆலோசனை பெற்று அதற்கான முயற்சி எடுத்தால் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வான்.

 ஏனெனில் இதுபோன்ற செயற்பாடுகளை எமது  முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்த எவரும் செய்யாமல் தடுப்பது எமது கடமையாக உள்ளது.

அதை விட்டு விட்டு நாளுக்கு நாள் அந்தக் கானொளியின் புகைப்படங்களை இனையத்தளங்களிலும் சமூக வலையத்தளங்களிலும் பதிவேற்றி  உங்கள் சகோதரர்களையும் விபச்சாரம் செய்ய தூண்டாதீர்கள்  ஆரம்பத்தில் புகைப்படம் மட்டுமே பதிவேற்றப்பட்ட்து தற்பொழுது அந்த கானொளிகளையே அனைவரும் பார்க்கும் படி பதிவேற்றிவிட்டர்கள்.

சைத்தான் மனித இரத்த நாளங்களில் ஓடுகின்றான். ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதியை காட்டும் புகைப்படங்களை பார்பவர்களின் கண்களையும் செய்த்தான் விபச்சாரம் செய்ய தூண்டுகின்றான் 

இலங்கை முஸ்லீம்கள் என்ற பெயரில் சிலர் ஏற்கனவே போதைப் பொருள் வியாபாரம்/கொலை/கொள்ளை என்பவற்றில் பிரசித்தி பெற்றே இருக்கின்றனர் அதே போன்று விபச்சாரத் தொழிளில் இலங்கை முஸ்லீம் பென்கள் இல்லை என்று யாராலும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.

இன்னும் ஊருக்கு ஊர் எமது சமூகத்தினர் சினிமா சீடீக்கள் விற்பவர்கள் என்ற பெயரில்  விபச்சாரம் செய்யும் சீடீ க்களையும் வினியோகிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் இவர்கள் ஒருத்தரல்ல ஆயிரம் பேர் இவர்களே எம் சமூகத்தையே வழிகேட்டில் தள்ளும் முதல் கூட்டம் 

தற்பொழுது அதையும் தாண்டி எமது சமூகம் இனையத்தளம் ஊடாக வழிகேட்டில் சாதாரனமாக அவர்களையே அறியாமல் சென்று விடுகின்றனர்.

இதில் சிறுவர்முதல் வயோதிவர் வரை யாரெல்லாம் இனைய வலையத்தளங்களில் உலாவுகின்றார்களோ அனைவரும் அடங்கும்.

உண்மையில் இனையத்தளத்தை வடிவமைத்தவர் உலகத் தொடர்பாடலை வேகப்படுத்தி நிறுவன்ங்களுக்கும் மக்களுக்கும் நண்மை செய்யவே.

ஆனால் தற்பொழுது எமது இளம் சமூகம் தேவை இல்லாத விடயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் சமூக வளையத்தளங்களினூடாக நேரத்தை வீனடிட்துக்கொண்டு அல்லாஹ்வையும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் மறந்தவர்களாக இருக்கின்றனர் 
ஒருவர் தமது  குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து இனையத்தில் ந்ல்ல விடயங்களைக்கூட பார்க்க முடியாத நிலையிலே செய்திகளும் பதிவுகளும் உள்ளது.

சாதாரனமாக இனையத்தலங்களில் எங்கு சென்றாலும் விளம்பரங்களை பார்க்களாம் விளம்பரங்களில் அதிகமாக பெண்களையே அரை குறை ஆடையுடன் கானக்கூடியதாக உள்ளது.

 குறிப்பாக சமூக வலையத்தளங்களில் நல்லதை விட தீய விடயங்களே அதிகமாக கானக்கூடியதாக உள்ளது அதுவும் அமைச்சர்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சேறுபூசும் செய்திகளே எம்மவர்கள் அதிகமானவர்கள் பகிர்கின்றனர். மது எவ்வறு ஹராமாக்கப்பட்ட்தோ அதே போன்ற ஒரு நிலையிலே தற்பொழுது சமூக  வலயத்தளங்கள் உள்ளன.

சமூக வலையத்தளங்களில் நீங்கள் இடுகின்ற ஒவ்வொறு அருவெறுக்கத்தக்க விடயங்களையும் எத்தனை பேர் பார்க்கின்றார்களோ அனைவர்களினதும் பாவத்தின் ஒரு பங்கு உங்களையும் வந்தடையும்

எமது சகோதரர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது

”மறுமை நாளில் நீங்கள் வீனடிக்கும் ஒவ்வொரு வினாடிகளைப்பற்றியும் விசாரிக்கப்படுவீர்கள்” அதற்கான பதிலையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள்”
ஒரு நல்ல விடயத்தை ஒருவருக்கோ ஒரு சமூகத்துக்கோ எடுத்துரைத்தால் அதை செய்பவர்களின் நண்மையில் ஒரு பங்கு உங்களையும் வந்தடையும் ஆதே போலத்தான் தீய செயல்களுக்கும் கடைசியில் உங்கள் நன்மைகளை மிஞ்சி உங்களை நரகிற்கே இட்டுச் செல்லும்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவரே முதல் கொலையை செய்தார் அதன் விலைவாக உலகம் அழியும் வரை செய்கின்ற கொலைகளின் பாவத்தின் ஒரு பங்கு அவரையும் சென்றடையும்.

இதை வைத்து நீங்கள் செய்யும் தீய விடயங்களின் பாவத்தின் அளவை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நாம் மிகவும் அனாச்சாரம் நிரைந்த கால கட்ட்த்தில் வாந்ந்து கொண்டிருக்கின்றோம் பொறுப்புதாரிகளும் சமூக தலைவர்களும் தம் மக்களை சீர்திருத்தும் பாரிய பொறுப்பு உள்ளதை மறந்துவிடக்கூடாது.

அல்லாஹ் எம் அனைவரையும் மானக்கேடான செயல்களில் இருந்து பாதுகாத்து ஸாலிஹான நல்லடியானாக மரணிக்க பிரார்த்திப்போமாக..!

1 comment:

  1. இந்த கருத்தை நான் கடுமையாக ஆதரிக்கிறேன். எனது முகநுால் பக்கத்திலும் பல முஸ்லிம் நண்பர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இது சும்மா இருப்பவர்களையும் தவறான விடயங்களை பாக்கவும் செய்யவும் துாண்டுவதாய் உள்ளது . தயவு செய்து இந்த காட்சிகளை ஒளிபரப்பி நீங்களே உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அதேு வேளை முக நுாலில் உள்ள சின்னஞ்சிறார்களையும் தவறான வழியில் இட்டுச்செல்லாதீர்கள். நீலத்திரைப்படம் ஒன்றை சமூக அக்கறைபோல் பேசி முகநுாலில் போடும் உத்தியோ இது என மற்றவர்கள் எண்ணத்துாண்டுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.