சஹாராவிடமிருந்து, அமோசனுக்கு..! இது இயற்கையின் அற்புதம்..!!
பூமியின் மிக வறண்ட பகுதியான சஹாரா பாலைவனத்திற்கும் மிக செழிப்பான பகு தியான பிரேஸிலின் அமேசன் மழைக்காடுகளுக்கும் இடையி லான தொடர்பை புதிய ஆய்வொன்று விளக்கியுள்ளது.
இது குறித்த விரிவான ஆய்வின் முடிவில் இந்த இரு வித்தியாசமான பிராந்தியங்களையும் புழுதி தொடர்புபடுத்தி இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளனர்.
சஹாரா பாலைவனத்தில் இருக்கும் ஊட்டசத்துக் கொண்ட பல மில்லியன் தொன் புழுதி காற்று மூலம் அட்லான்டிக் சமுத்திரத்தை கடந்து அமேசன் மழைக்காடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புழுதி அதிக பொஸ்பரஸ் கொண்டதாக இருப்பதால் அது சிறந்த இயற்கை உரமாக செயற்பட்டு அமேசன் வனத்தை பாதுகாப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமேசன் வனத் திற்கு எடுத்துச் செல்லப்படும் பொஸ்பரஸின் சரியான அளவை புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதன்படி அமேசன் வனத்திற்கு ஆண்டுதோறும் 22,000 தொன்களுக்கும் அதிகமான பொஸ்பரஸ் சஹாரா பாலைவனத்தில் இருந்து கிடைப்பதாக கணிக்கப்பட் டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சஹாரா பாலைவனத்தில் இருந்து 27.7 மில்லியன் தொன் புழுதி அமேசன் மழைக் காடுகளுக்கு காற்றின் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் "ஜோக்ரபிகல் ரிசேச் லெட்டர்ஸ்" சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
Post a Comment