பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் - ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு (வீடியோ)
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியின் பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் மக்கள் ஆணை நிறைவடைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமா, பொது தேர்தலுக்கு தயாராகுமாறு தமது ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் இன்று 26-02-2015 தெளிவூட்டப்பட்டது.
சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்ற போதே பிரதமர் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கை பிரிவினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
Post a Comment