மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் அச்சப்பட்டது - சுபைர்
கிழக்கில் அமையவுள்ள தேசிய மாகாண அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்று தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதில் நாமே அதிகமாக அக்கறையுடன் இருந்துவந்துள்ளதாகவும் கூறினார்.
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவு திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவைத் தலைவர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம் பெற்ற அமர்வில் மேலும் உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கூறுகையில்,
இன்றைய வரவு செலவு திட்ட விவாதத்தின் மீது நான் உரையாற்றுவது மகிவும் முக்கியமானதொரு காலத்தில் என நம்புகின்றேன்.
கிழக்கில் முதலமைச்சர் ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதிலும்,அந்த பதவி முஸ்லிம் காங்கிரஸூக்கு செல்ல வேண்டும் என்பதில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் முழு மனதுடன் செயற்பட்டவர்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பொதுஜன ஜக்கிய முன்னணியுடன் எமது தலைமைக்கும் தெரியாமல் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பில் கவலையடைந்தோம்.
2008 ஆண்டு இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 3 ஆசனங்களை பெற்று கிழக்கு மக்களுக்கு பெறும் பணியாற்றியது.அதே போல் 2012 ஆம் ஆண்டிலும் இடம் பெற்ற மாகாண சபை தேர்தலில் 3 உறுப்பினர்களை பெற்ற போதும்,எந்த வித அமைச்சுப் பதவிகளையும் நாம் கோறவில்லை என்பதை இ;ங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
அதே போல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்களை அதரிக்கும் விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் அச்சம் கொண்ட போது எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் துணிந்து முடிவெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினை வெற்றி பெறச் செய்தோம்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண புதிய முதலமைச்சருக்கும்,எமது கட்சியின் தேசிய தலைவருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலையடுத்து எமது தலைவர் கிழக்கு மாகாண ஆட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு எம்மிடம் பணித்துள்ளதையும் இந்த சபையில் கூறிக்கொள்ளவிரும்புவதாகவும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
Post a Comment