Header Ads



மத்திய வங்கியின் ஆளுநரான சிங்கப்பூர் பிரஜைக்கு, ஒரே நாளில் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது

விசா அனுமதி இன்றி இலங்கையில் வசிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸார் தேடி வருகின்ற முன்னனி சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் ஊடகங்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் ஓர் சிங்கப்பூர் பிரஜை எனவும் ஒரே நாளில் அவருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஜோன் அமரதுங்க இவ்வாறு குடியுரிமையை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கும் குடியுரிமை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திற்கு வருவதற்கு முதல் நல்லாட்சி ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

எனினும் நடைமுறைபடுத்தவில்லை, வேறு வார்த்தையில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செய்யும் போராட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்.

அதற்காக மக்கள் அணி திரள வேண்டுமேன குமார் குணரட்னம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.