Header Ads



மைத்திரிபால அரசாங்கம் குற்றச்செயல்களுக்கு, தண்டனை விதிப்பதை உறுதிசெய்ய வேண்டும் - அமெரிக்க பத்திரிகை

-gtn-

லங்கையின் பதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீள ஒப்படைத்தல் போன்ற வாக்குறுதிகளை அரசாங்கம் அளித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுனராக சிவிலியன் ஒருவரை நியமித்தல் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் வடக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்குதல் ஆகியனவற்றை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் இவ்வாறு பல்வேறு நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொண்டாலும் கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல்களிலிருந்து விடுபட முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில், இலங்கை அசராங்கத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு பேணி வரும் தொடர்பு தொடர்ந்தும் நீடிக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது கண்டனம் தெரிவிப்பதற்காக இதனை வலியுறுத்தவில்லை. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் கிரமமானதும், சுயாதீனமானதுமான விசாரணை நடத்தி, சாட்சியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஏதேச்சாதிகார ஊழல் மோசடிகள் ஆட்சியை கவிழ்த்து புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறி ஓரு மாத காலம் பூர்த்தியாகவில்லை.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வெளியிட்டு பழைய காயங்களை தூண்ட அரசாங்கம் விரும்பாது. நாட்டில் மீளவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் நாடி நிற்கின்றது.

எவ்வாறெனினும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலமே மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நியூயோர்க் டைம்ஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.