''ரவூப் ஹக்கீமின் உருவப்படத்தை, எரித்ததை கண்டிக்கின்றேன்' ஜெமீல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் நேரடியாக விவாதித்தேனே தவிர கட்சிக்கு வெளியே போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்நிலையில் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றமடைந்ததன் பிரதிபலிப்பாக தமது ஆதங்கத்தை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது தலைவரின் உருவப் படத்தை எரிக்க சிலர் முற்பட்டுள்ளனர். இந்த செயற்பாட்டை நான் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்.
சில தீய சக்திகள் எனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். எனது ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு இடம்பெற்றதாக சில ஊடகங்களும் தவறான செய்தி வெளியிட்டிருப்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எந்தவொரு பிரச்சினையின் போதும் நான் கட்சி மட்டத்திலும் தலைவருடனும் நேரடியாக கருத்துகளை பரிமாறுவதும் விவாதத்தில் ஈடுபடுவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்பதை கட்சியின் உயர் பீடத்தினரும் போராளிகளும் நன்கு அறிவார்கள்.
ஆனால் எனக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் கும்பல்கள் முதலமைச்சர் சர்ச்சையை பயன்படுத்தி என்னை கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் எதிரானவன் என்று சித்தரிக்கும் நோக்கில் மக்களுடன் மக்களாக நின்று தலைவரின் உருவப் படத்தை எரிப்பதற்கான சதியை அரங்கேற்றியுள்ளனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது இது தானோ?
ReplyDeleteஉங்கள் நடிப்பு பிரமாதம். நீங்கள் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் அவ்வாறான சம்பவம் நிகழாது தடுத்தி நிறுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட சம்பவம் உங்களுக்குத் தெரியாமல் நடந்திருக்கிற சந்தர்ப்பமில்லை, அதை விடுத்து இல்லை எனக்குத் தெரியாமல் நடந்துள்ளது என்று கூறுவதானது உங்களது சிறுபிள்ளைத் தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாகவே அமையும். காரணம் நீங்கள் கூறுவதை உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் சமூகத்திலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கின்றீர்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்து விடும். மிகவும் முக்கியமானதொரு சம்பவம் நடக்கவிருப்பதை நீங்கள் அறிந்திருக்க வில்லையே.
இதட்ட்கு தான் சொல்லுவது , பிள்ளையை கில்லி தொட்டிலை ஆட்டி விடுவது என்டு. பதவி ஆசையும் , பிரதேச வாதம் பிடித்த மாக்கள் .
ReplyDeleteஅப்படிப் போடுங்கள் திரு. ஜெமீல், உங்கள் அரிவாளை!
ReplyDeleteஇப்போது நீங்கள் ஒரு முழுமையான அரசியல்வாதியாக தேறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்!