Header Ads



புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற்றெடுத்தார்

கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கர்ப்பமாக இருக்கும் போது ஹீமோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொண்டும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கனடா-  ஒட்டாவாவை (Ottawa)சேர்ந்த ஜிலியன் ஒ’கொனோர் என்ற பெண் (Jillian O’Connor Age-31), 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்த போது மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே கருவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க, புற்றுநோய் மருத்துவர் மார்க் கிளிமன்ஸ் முடிவு செய்ததுடன், நான்காம் நிலை ஹீமோதெரபி சிகிச்சையை அளித்தார்.

புற்றுநோய் அவரது எலும்பு முனைகள், கல்லீரல் மற்றும் நிணநீர்ப்பை போன்ற இடங்களிற்கும் பரவத்தொடங்கி விட்டதால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒ’கொனோர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் மார்பக புற்றுநோய் மிக அரிதெனவும் 3,000 கர்ப்பிணிகளுக்கு ஒன்று என்ற விகிதமே காணப்படுகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் கிளிமன்சினால் கர்ப்ப காலத்தில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்ட மூன்றாவது பெண் ஒ’கொனோர் ஆவார்.

No comments

Powered by Blogger.