இனவாத கும்பல்களுடன் மஹிந்த, இன்னமும் தொடர்பு வைத்துள்ளார் - அமைச்சர் ராஜித்த
நாட்டின் அதிகாரம் தவறானவர்களின் கைகளுக்கு செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோமென தெரிவித்திருக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தினா, ஊழல் மோசடிகளுக்கு பெயர்போன, நாட்டை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பத்தை மீண்டும் ஆட்சிபீடமேற்ற சில இனவாத சக்திகள் முயலுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உண்மையான பௌத்தர்கள் ஒருபோதும் இனரீதியாக சிந்திக்கமாட்டார்கள். மஹிந்த ராஜபக்ஸ இன்னமும் இனவாத கும்பல்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். அந்தக் கும்பல்கள்தான் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொடுக்கப் போவதாக கூறுகின்றனர். இந்த இனவாத கும்பல்களை நாம் அடித்து விரட்ட வேண்டும்.
தற்போதுமஹிந்த ராஜபக்ஸவின் இருட்டறை நாடகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தமுள்ளன. இவற்றை மக்கள் முன் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். அவற்றுக்கு திர்ப்புக் கூறவேண்டியது மக்கள் மன்றமே. நாங்கள் குற்றத்தை நிரூபிப்போம். தண்டனை என்னவென்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.
very good Hon. Dr. Rajitha
ReplyDelete