Header Ads



ஐ.தே.க. யில் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு இனிமேல் இடமில்லை - கபீர் காசிமின் வெற்றிடமும் பூர்த்தியானது

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளராக மீண்டும் மலிக் சமரவிக்ரம தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியை விட்டு விரட்ட கட்சியின் நிர்வாக குழு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் கூட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக இருந்த அமைச்சர் கபீர் ஹசீம் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இதில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியில் இருந்து நீக்குவது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடிய அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி அத்தநாயக்க, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியதுடன் சுகாதார அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.

ரணில் – மைத்திரி இரகசிய உடன்பாடு என்ற பெயரில் போலி ஆவணத்தை தயார் செய்து அதனை பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அத்தநாயக்க கைது செய்யப்பட்டு தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.