பாராளுமன்ற தேர்தல் தற்போதைக்கு இல்லை..?
தேர்தலுக்கு செல்ல அவசரம் எதுவும் கிடையாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது. அவசர அவசரமாக தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் கிடையாது.
தேர்தல் முறைமயில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனக் கோரியே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment