Header Ads



தங்க திரிசூலத்தில் வெள்ளி காசு கட்டி, தனது வேண்டுதலை நிறைவேற்றிய மஹிந்த ராஜபக்ஷ

-tm-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , தங்கத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலையில் இருந்த சுபநேரமான 8.12க்கே அவர் இவ்வாறு காணிக்கை செலுத்தி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கதிர்காமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று,  84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விஹாரையில் அன்றிரவு நடைபெற்ற தர்ம உபதேசத்திலும் கலந்து கொண்டார்.

அவருடன் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ,  புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோரும் சென்றிருந்தனர்.

துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதனால், மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர்.

2 comments:

  1. மன்னா!!!!!!நீா் மக்களின் வேண்டுதலை சாியாக நிறை வேற்றியிருந்தால் இப்படி சூலம் ஏ்றற வேண்டிய தேவை ஏற்பட்டிருகாகாது

    ReplyDelete

Powered by Blogger.