' கல்முனையில் புதிய அரசியல் மாற்றத்துக்கான, நகர்வு'
'புதிய மாற்றத்துக்கான நிர்மாணமும் நகர்வும்' என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட சந்திப்பொன்று கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹ்மான் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு துறைசார் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் கல்வியலாளர்கள், தனவந்தர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டு மிகக் காத்திரமான கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டதுடன், முக்கிமான சில தீர்மானங்களையும் எடுத்தனர்.
மறைந்த தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்களுக்கு பிந்திய கடந்த 15 வாருடங்களாக அபிவிருத்தி என்றாலும் சரி சமூக அரசியல் தலைமைத்துவம் என்றாலும் சரி மிக நீண்ட வெற்றிடம் காணப்படுவதாக மக்கள் அங்கலாய்ப்பது அனைவரும் அறிவோம். இப்போதைய தலைமைகள் செய்ய வேண்டிய பணிகளைத் திறம்படச் செய்யத் தவறிவிட்டனர் இனியும் இந்தத் தவறுகளோடும் தொய்வுகளோடும் பயணிப்பதில் அர்த்தம் இல்லை என்பதும் புதிய மாற்றத்தினை மக்கள் சென்றுகொண்டிருக்கின்றார்கள் அந்த மாற்றத்தினை அர்த்தபுஷ்டியுள்ளதாக மாற்ற நாமும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் கலந்துரையாடலின் சாரம் அமைந்திருந்தது,
முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் கல்முனைக்கென்றுள்ள அந்தஸ்து மிக முக்கியமானது. அந்த அடிப்படையில் உதாசீனப்படுத்தப்பட்ட இந்நிலையினை போக்குவதற்காக கல்முனையில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் வாழும் அக்கறையுள்ள புத்திஜீவிகள் ஒன்றுபட்டு முஸ்லிம்களின் தனித்துவத்தைக் காத்;து கல்முனையை நோக்கி படையெடுக்கும் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு புதிய செய்தியை உரத்துச் சொல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இபிராந்தியத்தில் இயங்கிவரும் பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள், கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்லோரையும் உள்வாங்கி காத்திரமான மக்கள் நிறைவேற்று சபை ஒன்றினை நிறுவி, அதன்மூலமாக இச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
-அபு காலித்-
கருத்துக்களுக்கு நன்றி சகோதாரா என்ன செய்யலாம் இன்னும் துண்டு துண்டுகளாய் இச்சமுகத்தைப் பிரிப்போமா அல்லது என்ன தீர்வூ???
ReplyDelete