Header Ads



ஜனாதிபதி விசாரணை பிரிவை, கலைத்துவிட தீர்மானம்


ஜனாதிபதி செயலாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அமுல்படுத்தப்படும் ஜனாதிபதி விசாரணை பிரிவை கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறுவன மற்றும் செயற்பாட்டுக்கு பொறுப்பான ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர், காவற்துறை மா அதிபருக்கு இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாக காலத்தில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தநிலையில், அந்த பிரிவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக காவற்துறை மா அதிபர் என்.கே இளங்கக்கோனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அந்த பிரிவில் சேவையாற்றிய விசாரணை அதிகாரிகள் அந்தந்த சேவை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவர்களின் பொறுப்பில் உள்ள விஷேட விசாரணை ஆவணங்களை காவற்துறையினர் பொறுப்பேற்குமாறும் காவற்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.