Header Ads



அஹதிய்யா பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளும்

-எம்.எல். பைசால் - காஷ்பி-

இலங்கையில் 50 களின் ஆரம்ப காலகட்டங்களில் முஸ்லிம் மாணவ,மாணவிகளின் மார்க்க அறிவிவினை மேம் படுத்துவதற்க்காகவும்,அவர்களை கலாசார சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்காகவும்  எம் நாட்டின் கல்விமான்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டதே அஹதிய்யா பாடசாலைகளாகும்..

காலி,களுத்றை,கொழும்பு.கம்பஹாஆகிய  மாவாட்டங்களில் வளர்சி அடைந்திருந்த இக்கல்வி பிற்பட்ட காலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் செல்வாகிற் குள்ளானது. இன்று சுமார் 500 கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன( அல் - ஹம்துலில்லாஹ். )

ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை கல்வி போதனா கழகத்தின் தலைமையில் மத்திய அஹதிய்யா சம்மேளனம் இதன் பணியினை சிறந்த திட்டமிடல்களுடன் முன்னெடுத்து வருகின்றது. (இக்கில்விக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் அல்லாஹ் சிறந்த கூலியை கொடுப்பானாக...)

அஹதிய்யா மத்திய சம்மேளனம் கல்வி பணிமனைக்கு சமாந்தரமாக அதன் மாவாட்ட,பிரதேச  சம்மேளனங்கள் மூலமாக நன்றாக  இக்கல்வியின் தரத்தினை முன்னேற்ற உழைத்துகொண்டிரிகின்றது .நீண்டகாலமாக அவர்களால் நடாத்தப்படும் அஹதிய்யா இடைநிலை பரீட்சை, அதன் அமைப்பு  விதிகள்,மற்றும் கருத்தரங்குகள், .பயிற்சி வகுப்புகள்,கற்பித்தல் செயல் ஒழுங்குகள் , மாநாடுகள் போன்ற பல செயற்பாடுகள் இதற்கு சான்றாகும்.

90 களின் பிற்பட்ட காலம் முதல் அஹதிய்யா கல்வி நிறுவனத்துடன் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைகளம் தொடர்பினை அதிகரித்து   அதன் வளர்ச்சிக்கு பாரிய தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்  திணைக்களம் பல நிறுவனங்களுடன் தொடர்புகளை நிருவாக ரீதியாக கொன்டிருந்தாலும் அஹதிய்யா நிறுவனம் திணைக்களதுடன் சேர்ந்து செயற்படுவதை ஒப்பிடும் போது அது சகல நிறுவனங்களை விடவும் முதன்மையாக  செயற் திறனுடன் பணியாற்றும்   ஒரு நிறுவனம் என்று குறிப்பிட்டு சொல்வதால் அது  மிகையாகாது.

முஸ்லிம் திணைகளத்தில் பணிபுரிந்த பணிப்பாளர்களான அஸ்ஷேக்: எம்.ஐ.அமீர்,அஸ்ஷேக்: எம்.வை.நவவி ஆகியோர்களின் பணி அஹதிய்யா கல்வி வளர்ச்சியில் எப்பொழுதும் நினைவு படுத்தப்பட கூடியதே. இன்றைய பணிப்பாளர் அஸ்ஷேக்: எஸ்.எச்.எம் சாமில் அவர்கள் கூட மிக அர்ப்பணிப்புடன் இக்கல்விக்கு தொண்டு புரிவதை  அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது,மேலும் அங்கு பணி புரியும் பொறுப்பாளர்கள் அஹதிய்யா விடையங்களில் மிக மனவிரிப்புடன் ஈடுபடுகின்றனர்.. 

தொடர்ந்தேச்சியான அர்ப்பணிப்பின் பயனாக  அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் ,பாடப் புத்தகம்,பரீட்சை திணைக்களத்தின் மூலமான அஹதிய்யா சான்றிதழ்,உயர் நிலை, தர்மச்சாரிய பரீட்சைகள்,கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான வருடாந்த நூலாக கொடுப்பனவுகள், சீருடைகள் ,,,என இக்கல்விக்காக கிடைக்கப்பெற்ற அரசாங்கத்தின்அங்கீகாரம் எனலாம்,,(அல் ஹம்துலில்லாஹ்)

அஹதிய்யா பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பரீட்சைகளை நடாத்துவதோ அல்லது விழாக்களை நடாத்துவதோ அல்ல.அவை இக்கல்விக்கான  மேம்படுத்தல்களும் ஊக்குவிப்புக் களுமேயாகும்.. தஹம்,அறநெறி பாடசாலைகள் தமது மாணவர்களுக்கு சமய அடிப்படையில் ஒழுக்க, தர்ம நெறிகளை போதிப்பதை போல முஸ்லிம் மாணவர்களின் சமய அறிவினயும் பண்பாட்டினையும் வளர்ப்பதற்காக அஹதிய்யா கல்வி முறை காணப்படுகின்றது.

நாட்டில் மாலை நேர தனியார் இஸ்லாமிய கல்வி அமைப்புகள்  இருப்பினும் முழு முஸ்லிம் மாணவ சமுகத்திற்காகவும்  ஒழுக்க நெறிகளையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் முன்னெடுக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது அஹதிய்யா கல்வி அமைப்பே.

இன்றைய நவீன உலகில் மாணவர்கள் அதிகமான கலாசார சவால்களை எதிர் கொண்டிருக்கின்றார்கள்,ஒவ்வொரு நாளும் பண்பாட்டு சீரழிவு நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.ஈமானை பாதுகாப்புடன் வைதிருப்பது மிகுந்த சவாலாகவே இருக்கின்றது,, மாணவ சமுகத்தினை மட்டு மல்லாது எம் சமுகத்தினயே பாதித்து கொண்டிருக்கின்றது.. 

நபி ஸல் அவர்கள் கூறிய நபி மொழி பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறது.
"ஒரு மணிதன் காலையில்  விசுவாசியாக இருக்கின்றான், மாலை நேரமாகும் போது காபிராகின்றான், மாலையில்  விசுவாசியாக இருப்பவன் காலை  நேரமாகும் போது  காபிராகமாறுகின்றான். உலகின் அர்ப்ப சலுகைகளுக்காக மார்க்கத்தினை விற்கின்றான்"..-முஸ்லிம்-

இந்நபி மொழி எம் சமுகத்தின் சகல அங்கத்தவனும் தனது  ஈமானை பாதுகாக்கும் நட வாடிகையில் ஈடுபடல் அவசியம் என்பதை தெளிவாக கூறி நிற்கின்றது. பாடசாலைகளில் போதிக்கப்படும் இஸ்லாம் பாடம் பொதுவான விடையங்ளை  கற்பிக்கப்பிகின்ற பொழுதிலும் செயற்ப்பாட்டுடன் கூடிய அறிவினையும், வழிகாட்டல்களையும், நெறிப் படுத்தல்களையும்,தனி மனித விருத்தி செயற்ப் பாட்டினையும் பெற்றுக் கொடுக்கும் இடமாக அஹதிய்யாவினை காணலம்.
  
பாடசாலை  இடை நிலை கல்வியினை முடித்து விட்ட மாணவர்கள் தமது விருப்புக்கு ஏற்ப்ப உயர் கல்வியினை பெறுவதற்க்காக  தன்னை தயார் படுத்தலில் ஈடுபடுவதனால்  இஸ்லாமிய கல்வி, அல்லது அதனுடன் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதை   காண்பது அரிதே. இளமை காலத்தில் அடிப்படை  மார்க்க வழிகாட்டல்களை பெற்றுக்  கொடுப்பது பெறோர்களின் கடமையும். பொறுப்புமாகும்.அதற்காக அவர்கள் இக்கல்வி முறையில் தனது பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதற்கு துணை நிற்றல் அவசியம். பெரும்பாலும் அஹதிய்யா பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளில் நடைபெறுகின்றன,ஒரு சில மஸ்ஜிதுகளை   இணைந்துள்ள குர்ஆன் மத்ரசாக்களிலும், அஹதிய்யா நிலையங்களிலும் இக்கல்வி வழங்கப்படுகிறது.

தொண்டர் அடிப்படையில்  தன்னை அர்ப்பணித்து ஆசிரியர்கள் தங்களது பணியினை வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். பொருளாதார சிக்கலினால்  அல்லது ஆளணி இன்மையினால் இக்கல்வியினை கொண்டு செல்வதற்கு தடைகளை பெரும்பாலும் காண முடிவதில்லை.அல் ஹம்துலில்லாஹ் அஹதிய்யா பணிக்காக தங்களை அர்ப்பணித்த சகோதரர்கள் திறம்பட முன்னெடுத்து கொண்டே வருகின்றனர். 

இலங்கை பரீட்சை திணைக்களம்,முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைகளம்,அஹதிய்யாவுக்காகக் பணி புரியும் மாவாட்ட,தேசிய அளவிலான தொண்டர்களும் பணியாளர்களும் இக்கல்விக்காக துணை நிற்ப்பதை  பெரும் சக்தியாகவே கொள்ளலாம். இவ்வாறு இக்கல்வியினை முன்னெடுத்து செல்ல  சகல வளங்களும் இருக்கும் நிலையில் அது சில பிரச்சினைகளையும்  எதிர்நோக்கிக் கொண்டே வருகிறது.

பொது கல்வியில் போட்டி நிகழ்கின்ற இக்காலத்தில்  வார இறுதி நாளிலும் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்குக்குச் சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறப்பாக இக்கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியாமல் உள்ளது. பெற்றோர்கள் பிரத்தியேக வகுப்பு என்று வரும் போது அஹதிய்யா கல்வியினை விட  பிரத்தியேக வகுப்பிற்கு முதன்மை அளிக்கக்கூடிய நிர்பந்தத்திற்க் குள்ளாகின்றனர். சில பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் இக்கல்வி நடவடிக்கைக்காக ஊக் குவிப்பு கொடுக்காமையும்,அஹதிய்யாவில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பாடசாலைகளுடன் தொடர்புகளை குறைவாக கொண்டிருப்பதனாலும் மாணவர்களை வரவழைப்பதில் பாரிய பின்னடைவினை  எதிர் கொள்கின்றன.

பாடசாலைகளில் அஹதிய்யா பாடசாலையின்  காரியாலய கோவைகளை வைத்து பாதுகாப் பதற்கான ஏற்பாடுகள் மிக குறைவே (சில பாடசாலைகளில் ஏற்பாடுகள் உண்டு) கற்பித்தல் முறையினை  பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் செயற்பாடுகளை கூட காண முடியாமல் இருக்கின்றது. ஆண்கள் கற்பித்தல் செயற்ப்பாட்டில்  ஈடுபட்ட பொழுதிலும் உயர் கல்வியினை முடித்த பெண்கள் அஹதிய்யா கற்பித்தலில்  ஒப்பீட்டளவில் கூடுதலாகவே ஈடுபடுத்தப் படுகின்றனர். , திருமண பந்தத்தில் அவர்கள் நுழைந்ததன் பிறகு ஆசிரியர் பணியினை பெரும்பாலும் தவிர்ப்பதனால்  ஆசிரியர்களின் விலகல் கூடுதலாகவே  இருக்கின்றது.  

மார்க்கம் கற்ற ஆலிம்கள் இப்பணியில் சேர்ந்து கூடுதலாகலாக பங்கு பற்றாமல் இருப்பதும்,பயிற்றப்பட்ட ஆளனியினர்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு குறையாகவே சுட்டி காட்டலாம்.  அஹதிய்யாவுக்குள்ள வளங்களை பயன்படுத்தி அது எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து இதனை முன்னெடுத்து செல்ல துணை புரிவது சமூக நிறுவனகள், அமைப்புகளின் பொறுப்பாகும். எதிர் கால சமூகத்திற்கு சிறந்த முறையில் இதனை ஒப்புவிக்கின்ற கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு.

சமுகத்தில் உள்ள முக்கிய சமுக சேவை நிறுவனங்கள்   இக்கல்வி,அதன் செயற்பாடு பற்றி கவனதிற் கொள்வது அவசியமாகும். மார்க்க  வழிகாட்டல் சபையான இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உயர் மட்ட வழிகாட்டல்களை வழங்குவதோடு மட்டுமல்லாது  நிறுவன ரீதியாக அவர்களின் பங்களிப்புக்கள்  மிகவும் துணை புரியும்.

அஹதிய்யா கல்வி அமைப்புக்காக வேண்டி தும்மல சூரியாவில் இருக்கும் அஹதிய்யா அகடமி பெரும் வளத்தினை கொண்டுள்ளது. அதில் இக்கல்விப் பணியில்  ஈடுபடும் ஆசிரியர்களின் வள நிலையமாக பயன்படுத்துவதற்க்கான சந்தர்ப்பத்தினை அஹதிய்யா நிறுவனம் துறைசார்ந்த வர்களுடன் கலந்துரையாடி திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்துவது பற்றி சிந்திக்க முடியும் .அதன் போது ஆசிரியர்களை பயிற்றுவித்து இக்கல்வினை மேம்படுத்தலாம். 

தர்மச்சாரிய பரீட்சையில் சித்தியடைந்தவர்களை அஹதிய்யா ஆசிரியர்களாக நியமிக்க இருப்பதாக முன்பிருந்த அரசாங்க காலத்தில் சொல்லப்பட்டது அதற்கான ஏற்பாடுகளை அவசரப் படுத்துவாதனால் ஆசிரியர்களின் வளத்தினை தொடர்ந்து பேணுவதற்கு உதவியாக அமையும். அஹதிய்யா பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களின் பல்கலை கழக நுழைவில் 5 வீத புள்ளிகள் வழக்கப்படும் என்ற விடையத்தில் பலருக்கு தெளிவின்மை இருக்கின்றது அதனை தெளிவு படுத்துவதனால் மாணவர்களை வரவழைப்பதற்கு ஒரு கவர்ச்சியாக ஆக்கிக் கொள்ளலாம்.

வார இறுதி நாளில்    பிரத்தியேக வகுப்புகள் நடாத்துவதற்கு  தடை இருப்பதாக சொல்லப்படுகிறதே தவிர அதற்க்கான அதிகார பூர்வமான அறிவுறுத்தல்கள் அஹதிய்யா நடத்துனர்களுக்கு  தெரியப்படுத்த்தபப்டாமல் இருக்குகின்றது..இது பற்ரி கவனம் செலுத்துவதால் இக்கல்வினை பாதுகாக்லாம் இன்ஷா அல்லாஹ்.
  
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த பொழுதிலும் அங்குள்ள பெரிய கிராமங்களில் இதன் செல்வாக்கு மிக குறைவே, இந்நிலையில் புதிய முஸ்லிம் முதல்  அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி மகாண சபை மூலம் இக்கல்வினை முன்னேற்ற துணைபுரிவது மிகவும் சிறப்பாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். 

நீண்ட இடைவெளியின் பின்பு முஸ்லிம் கலாசர அமைச்சர் ஒருவரை புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த தருணத்தில் இக்கல்வியினை மேம்படுத்த பல வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறந்த சந்தர்ப்பமாகும்.
அஹதிய்யா கல்வி எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  இனங்கண்டு சுமூகமாக முன்னெடுக்கவும் ,அதனை மேம்படுத்தவும் கிடைக்கபெற்றிருக்கும் அமைச்சின் மூலம் திட்டங்களை தீட்டி முன்னெடுக்க அதிகமாகவே வாய்ப்பு உண்டு இன்சா அல்லாஹ் .

No comments

Powered by Blogger.