வரவுசெலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் ஜே.வி.பி. காணாமல் போனது ஏன்..?
அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்ற தருணத்தில் ஜே.வி.பியின் 3 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாமை தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி கேள்வி யெழுப்பியுள்ளது.
இன்று 08-02-2015 முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இந்த கேள்வியை எழுப்பினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 164 வாக்குகளும். எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டது.
முன்னிலை சோசலிச கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீய உறுப்பினரான அஜித் குமார வரவு செலவு திட்டத்தி;ற்கு எதிராக வாக்களித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான திணேஷ் குணவர்தன, டிவ் குணசேகர, திஸ்ஸ வித்தாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றம் விமல் வீரவங்ச, கீதாஞ்சன குணவர்தன, வை.ஜி.பத்மசிறி, சந்திரசிறி கஜதீர மற்றும் வீரகுமார திசாநாயக ஆகிய உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கவில்லை.
எவ்வாறாயினும், இன்றை செய்தியாளர் சந்திப்பில், விமல் வீரவங்ச மற்றும் வீரகுமார திசாநாயக்க ஆகியோர் வாக்களிக்காமைக்கான காரணம் தொடர்பாக விபரிக்கப்பட்டது.
இதனை அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க விபரித்தார்.
இது நாங்கள் தயாரித்த வரவு செலவுத் திட்டம் அல்ல, எங்களுக்கென்று அரசியல் நிலைப்பாடு உள்ளது. ஆனால் ஜே.வி.பி நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்கள் எங்கே சென்றார்கள்.
வரவு செலவு திட்டம் சரியானது என்று கூறியவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். மிகவும் சிறந்த சலுகை நிறைந்த வரவு செலவு திட்டம் என விஜித்த ஹேரத் கூறினார்.
நேற்று அவர் நாடாளுமன்றத்தில் ஒழிந்து கொண்டார். ஜே.வி.பியினர் நேற்று நீராவியைப் போன்று மறைந்து விட்டார்கள்.
தேசிய சுதந்திர முன்னணியின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா,
கொண்டுவரப்பட்ட இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பாக ஜே.வி.பி தமது சார்பு நிலையை வெளிப்படு;த்தியது. அதிலுள்ள குறைப்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் கருத்து தெரிவித்தோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும், நாங்கள் கருதினோம். அத்துடன் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறும் என்று கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறு தேவைகளுக்கான நாங்கள் சபையிலிருந்து வெளியேறவில்லை. தாம் அடைந்த தோல்வியை மறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
Post a Comment