முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர், பெரும்பான்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்...!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டாவது முறையாகவும் துரோகமிழைத்துள்ளது. நாளை மறுதினம் 10 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாதமாக செயற்படுகின்றது என்று மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். ப. அரியநேத்திரன் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது. அத்துடன் முதலமைச்சர் பதவியையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க தயாராகவிருந்தது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்து விட்டு பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கிய மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து கூட்டமைப்புக்கு துரோகம் செய்தது.
இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி விட்டு ஆட்சியமைத்து இரண்டாவது முறையாகவும் துரோகமிழைத்துள்ளது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் என்ன செய்யப் போகின்றது என்றும் கேள்வி எழுப்பினார்.
Drogam seydadu drogam seydadu enru solgireergale drogam enral enna enru theriyuma? Eluda theriyumndu edayum eluda vaanam pls
ReplyDeleteBetter to defeat.power and money will lost in E/P
ReplyDeleteneengalum ltte udan sernthu pallihalai udaithakkalthan santharppam parthu pesuringa nalla aatkal polum
ReplyDelete