Header Ads



''நாளைய இஸ்லாமிய, சமூகத்துக்கான தலையெழுத்து''

-Dr.Mifraaz Shaheed-

முஸ்லிம் காங்கிரஸ் என்பது இலங்கை அரசியலின் தலையெழுத்தல்ல.அது வெறுமனே தலையங்கமே. எத்தனையோ ஆழுமை உள்ள இயக்கங்களும் கட்சிகளும் தலைமைகளும் காங்கிரஸ் என்ற இந்த மாயையால் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. 

முஸ்லிம் அரசியலுக்கான பிரதியீடு தேவை என்ற நிலை சமூகத்தில் எப்போதோ தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. படிப்படியாக காங்கிரஸ் என்ற மாய விம்பம் உருச்சிருக்க தொடங்கிவிட்டது. 

கடந்த தேர்தல் கால வரலாறு இதற்கு சான்று பகிர்கின்றது.கடந்த தேர்தலில் எந்த காங்கிரசும் சமூகத்துக்கு வழிகாட்டவில்லை. சமூகம் தான் அவர்களுக்கு வழி காட்டி இன்று அமைச்சர்களாக அமர வைத்திருக்கின்றது. 

முஸ்லிம் சமூகத்துக்கு தேவையானதெல்லாம், மாலைகளும் சால்வைகளும் பொன்னாடைகளுமற்ற ஓர் அரசியல் கலாச்சாரம். கல்வி அறிவும் மார்க்க அறிவும் ஒருங்கமையப்பெற்ற அரசியல் தலைவர்கள்.தான் இறந்த பின்னும் கபுருக்கு துஆக்கள் வந்து சேர வேண்டும் என்று எண்ணம் கொண்ட பற்றட்ட  தியாகிகள். 

இந்த இடத்தில் சமூகம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே சட்டக்கல்லூரிகளின் வெளியீடுகள் அரசியலுக்கான அடிப்படை தகைமகளல்ல. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதே வரலாற்று தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள். நாளைய இஸ்லாமிய சமூகத்துக்கான தலையெழுத்து வரும் தேர்தலில் உங்கள் விரலில் தீட்டப்படும் மையில் தான் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். 

6 comments:

  1. உண்மையாக சத்தியமாக உண்மைய சொல்லி இருக்கிறார் கட்டுரையாளர்.... எமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாதவரை இன்னும் பற்பல ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கப்படுவார்கள் இந்த காங்கிரசுகள் மூலமாக!!!!!!

    ReplyDelete
  2. கட்டுரையாளன் மீக நுணுக்கமாக சுருக்கமாக கூறிய இவ்விடயங்கள் சமூகத்திற்கு எடுத்துச்செல்லப்படல் வேண்டும் .காங்கிரஸ் ஒரு காட்சிப்பொருளானதே தவிர அது செய்தது என்று எதுவுமல்ல்.பணம்படைத்த ஒரு சிலருக்கு காங்கிரஸ் ஒரு சிறந்த கெளாரவமான முதலீட்டு திட்டமாகும்.ஆனால் பொத்துவில் முதல் புத்தளம்வரை 2001 முதல் அபிவிருத்தி அரசியலும் இல்லை உரிமைமீட்பு அரசியலும் இல்லை.சிறுபாண்மையினரின் உரிமைகள் பற்றி த.தே.கூட்டமைப்பும் மாறிவரும் அரசாங்கங்கள் கொம்மிசனுக்காக அபிவிருத்திகளையும் செய்கின்றன.
    எல்லாகாங்கிரஸும் கல்லாப்பெட்டி சிங்காரங்களே.

    ReplyDelete
  3. இப்படியான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் .

    ReplyDelete
  4. ஏனைய சமூகங்கள் அரசியலில் முன்னேறிச் செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருக்க நம்மவர்களை கற்காலத்திலேயே வைத்திருக்கும் அரசியலைத்தான் மு.காங்கிரஸ் வகையறா கட்சிகள் இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.

    வாக்குகளை அபகரிக்கும் இவர்களது வெளிவேஷமும் பதவிகளை மோகிக்கும் உள்மன அழுக்குகளும் வயிற்றைக் குமட்டச் செய்கின்றன.

    இவர்கள் உயர்வர்க்க முதலாளிகளின் முஸ்லீம் பிரதிநிதிகளே தவிர, சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்க முஸ்லீம்களின் பிரதிநிதிகள் கிடையாது. இதைப்புரிந்துகொண்டு நாமாகவே துணிந்து இறங்கிப் போராடினால்தான் உண்டு.

    ReplyDelete
  5. Yes our ummah have been taken for a ride making mockery of us .
    Enough is enough.
    High time we got rid of this hoodlums.
    Lets forge ahead .
    nice article food for thought.
    Jzkllhr Dr shab.

    ReplyDelete
  6. It is high time the Sri Lankan Muslim community realises the folly of "Muslim Politics".
    It is really consoling to know that at least some intelligent Muslims have understood. Now the Muslim intelligencesa in every town and village must come out boldly and in the interest of the community to enlighten the Muslim mass about the folly of "Muslim Politics".
    The ACJU can do much to educate the community about the danger of Muslim Politics and the fatal consequences we have already experienced.
    Hamid

    ReplyDelete

Powered by Blogger.