சட்டவிரோத இஸ்ரேலுக்கு, பலஸ்தீனம் இழப்பீடு வழங்க வேண்டும் - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களு க்கு பலஸ்தீன விடுதலை அமைப்பு (பீ.எல்.ஓ) மற்றும் பலஸ்தீன அதிகார சபை (பீ.ஏ.) பொறுப்புக் கூற வேண் டும் என்று நியயோர்க்கின் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002 மற்றும் 2004இன் இர ண்டாவது பலஸ்தீன இன்திபாழா போராட் டத்தின்போது கிழக்கு nஜரூசலத்தில் நடத்தப்பட்ட ஆறு தாக்குதல்களில் 33 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கண க்கானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 218 மில்லியன் டொலர்களுக்கு அதிக தொகை நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் குழு தீர்ப்பளித்து ள்ளது.
இந்த தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டிருக்கும் பலஸ்தீன குழுக்கள் மேன் முறையீடு செய்யப்போவதாக உறுதி அளித்துள்ளன. இதில் கொல்லப்பட்ட வர்களில் அமெரிக்க பிரiஜகளும் அட ங்குகின்றனர். இவர்களே அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் உத்தியோகபூர்வமாக எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்று இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என்று குறிப்பிட்டிருக் கும் பலஸ்தீன நிர்வாகம் இந்த தீர்ப் பையொட்டி ஏமாற்றம் அடைவதாக வும் கூறியுள்ளது.
எனினும் குறித்த தாக்குதல்களுக்கு பலஸ்தீன நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட்டிருப்பதாக ஆவணங்களை ஆதாரம்; காட்டி பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு பலஸ்தீன நிர்வாகத்திடம் இருந்து இன்னும் சம்பளம் கிடைக்கிறது. அவர்கள் சிறையில் இருக்கும் நிலையிலும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது" என்று பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் சார்பிலான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் என்றும் அது குறித்து பீ.எல்.ஓ. மற்றும் பீ.ஏவுக்கு பொறுப்பேற்க முடியாது என்று பிரதி வாதிகளின் வழக்கறிஞர் குறிப்பிட்டு ள்ளார்.
Post a Comment