Header Ads



தேசிய அரசாங்கம் வேண்டாம், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டாம் - அனுரகுமார


தேர்தல் ஒன்றை நடத்தாமல் பாராளுமன்றின் காலத்தினை நீடிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாதென ஜே.வி. பி. யின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே  அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்;

தேசிய அரசாங்கம் வேண்டாம். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஒன்றை நடத்தாமல் , பாராளுமன்றின் காலத்தினை நீட்டிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

பொதுத் தேர்தலின் பின்னர் அந்தந்த கட்சிகளுக்குத் தேவையான வகையில்  தேசிய அரசாங்கமொன்றை  அமைத்துக்கொள்ள முடியும் . தேசிய அரசாங்கமொன்றில்  ஜே.வி.பி. அங்கம் வகிக்காது என்றார். 

இதேநேரம் உரிய நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி . யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது எமது கட்சி எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை . பொதுத் தேர்தலில் ஜே.வி.பி . தனித்தே போட்டியிடும்.

 பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கின்றது . எனினும் அவ்வாறு தேர்தலை ஒத்தி வைக்கும் உரிமை  அரசாங்கத்திற்கு கிடையாது.

ஜனாதிபதியின் 100   நாள் திட்ட யோசனையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை மீறும் முயற்சிகளை சில தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும்  இவ்வாறு பாராளுமன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதைனை அனுமதிக்க முடியாது எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.