Header Ads



ஊடகவியலாளர் ஏ.எஸ்.புல்கி மறைந்தும் மறையாதவர்

(முஹ்சி)

புத்தளத்தின் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.புல்கி இன்று (25.2.2015) காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிவூன்". கடந்த ஏழு மாதங்களாக கடும் நோய் வாய்ப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார்.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் தனக்கென தனியான இடத்தினைப் பெற்றிருந்த புத்தளம் பிராந்திய செய்தியாளரான அவர்  பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு பிராந்திய செய்தியாளராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகளையும் எழுதியுள்ளார். புத்தளம் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சங்கங்களில் அங்கத்துவம் வகித்து, சிறப்பாக பணியாற்றியவர்.

நோயுற்ற காலங்களில் அவரைப் பார்க்கச் செல்கையில் தனக்காக பிரார்த்திக்குமாறு கூறுவார். ஜும்மாவுக்கு செல்ல முடியாததை இட்டு கவலைக் கொள்வார். அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அவருக்கு சில பங்களிப்புக்களை செய்வதற்கும், அவர் கூறும் சில எழுத்து விடயங்களையும் செய்யக் கிடைத்தது. அல்ஹம்துளில்லாஹ்.

அவர் இறக்கும் போது வயது 68 ஆகும். அன்னார் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் ஊடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்றும்எம் அனைவர் நினைவில் படிந்திருக்கும். புத்தளத்தைப் பொறுத்த வரையில் பத்திரிகைத் துறையில் அவர் ஒரு ஜாம்பவான் தான்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவர் செய்த அனைத்து நற்கருமங்களையும் ஏற்றுக் கொள்வானாக. உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை அன்னாருக்கு பரிசாக வழங்குவானாக.

No comments

Powered by Blogger.