மஹிந்தவை பிரதமராக்க 'விரும்பினால்' நீங்களும் கையெழுத்து போடலாம்..!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று 26-02-2015 கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென கோரியே இந்த பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள கையெழுத்து திரட்டும் ஆரம்ப நிகழ்விற்கு பௌத்த பிக்குகள் மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதுவெல்லாம் ஒரு நாடகம். விமல்வீரவன்ச உண்ணா விரதம் இருந்தாலும் ஆச்சரியமில்லை. நாட்டைச் சூறையாடித் திண்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் அதே ஆசை தான். அரசாங்கத்தின் அமைதிப் போக்கே இவர்களின் ஆட்டத்துக்குக் காரணம். கையெழுத்துதானே ஒவ்வொரு விதமாகப் போட்டுக்கொள்ளலாமே. ஆளுக்கு 100 நீங்களுகளே போட்டு ஏமாற்று வித்தையை முடித்துவிடுங்கள்.
ReplyDelete