ஜனாதிபதியின் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்களை பொதுத் தேர்தலுக்கு முன் ரத்துசெய்ய வேண்டும் - அனுரகுமார
ஜனாதிபதியின் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக ஜனாதிபதி முறைமையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாத ஆரம்ப பகுதியில் இதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அதிகாரங்களை வரையறுக்கும் அரசியல் சாசன திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் இந்த வாரத்தில் சகல கட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யவதற்கு இதனை விட்டால் வேறும் சந்தர்ப்பம் கிடையாது எனவும் இதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ரத்து செய்வதன் மூலம் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில விடயங்கள் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழேயே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி பாரிய பங்களிப்பினை செய்தது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தங்காலை நகரில் (8) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக நாடுபூராகவும் மக்களை தெளிபடு த்தி செல்கின்றோம். தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்ன ணிக்கு பத்து வருடங்களுக்கு பின்பு கூட்டம் ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களது வயிற்றுப் பிரச்சினைக்கு பதிலாக நாட்டுப் பிரச்சினையை முன்னணி வகித்து ஆட் சியை மாற்றியமைக்க மக்கள் முன்வந்தார்கள். ஜனாதிபதி செயலகத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை இன்று வரை எவருக்கும் தெரியாது.
இவற்றை யார் பயன்படுத்தினார்கள் இதன் விபரங்கள் யாவை? இவை யாரிடம் உள்ளன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் கூறுகிறார்கள் ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை யென இது உண்மை.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவினை திரட்டவுள்ளோம். ஆட்சி மாற்றத்தின் போது புதிய பிரதமரான மோடி இந்தியாவின் கடந்த ஆட்சியின் போது திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறு வதற்கு ஒரு ஒழுங்கான திட்டத்தினை தயாரித்து முன்னெடுத்தார்.
Post a Comment