முஸ்லிம்கள் மகிந்தவுக்கு வாக்களிப்பதை நிராகரித்தனர் - டியூ. குணசேகர
2005ம் ஆண்டு தனக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியமுள்ள ஒரு நபர் மகிந்த மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்ததாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ஒரு பிரசித்தமான தலைவர் மட்டுமல்ல, பலரால் மதிக்கப்பட்டவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைதான் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பாழடித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005, 2010 தேர்தல் முடிவுகள் உட்பட 1977ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வட, கிழக்கில் தமிழ் வாக்குகள் அதிகரிக்கும் என்பதாகவிருந்தது.
ஆனால் கணிசமான அளவுக்கு அது காணப்படாததினால் மகிந்த வழக்கமாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் 20 விகிதத்தை பெற்று வந்தார்.
எனினும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் பொதுபல சேனாவின் செயற்பாடு காரணமாக முஸ்லிம் மக்கள் மகிந்தவுக்கு வாக்களிப்பதை நிராகரித்தனர்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நான் முன்னாள் ஜனாதிபதியை மும்முறை சந்தித்தேன்.
இச்சந்திப்பின் போது 1994க்குப் பிறகு பிறந்து முதல் முறையாக வாக்களிக்க தயாராகவுள்ள வாக்காளர்கள் ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவித்தேன்.
மேலும் தாங்கள் விழாக்களில் பங்கெடுப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் போன்றவற்றைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்களே தவிர, அரசியல் செய்யவில்லை எனவும், எங்கள் ஆய்வுகளின்படி 11 மாவட்டங்களில் மாத்திரமே மகிந்த முன்னிலையில் இருப்பதாகவும் மீதமுள்ள இரு ஆட்சி காலங்களிலும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவரிடம் கூறினேன்.
எனினும் இது நாம் வெற்றி பெறுவதற்கு சரியான தருணம் என முன்னாள் ஜனாதிபதி என்னிடம் வலியுறுத்தினார்.
இதேவேளை கடந்த கால அரசாங்கத்தினால் ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சித்த போது நான் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருந்தேன்.
அவ்வேளை போராட்டக்காரர்கள் பிரதம நீதியரசரின் வீட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தமையும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவர் போராட்டக்காரர்களிடம் தொலைக்காட்சி புகைப்படக் கருவி சகிதம் விஜயம் மேற்கொண்டிருந்தமையும் ஒரு தவறான செயல்.
தற்போதைய புதிய அரசாங்கமும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு தவறைத்தான் செய்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நீதியரசர்களை பாராளுமன்றத்தினால் மாத்திரமே அகற்றமுடியும்.
ஆனால் அவர்கள் இவ்விடயத்தை பாராளுமன்றத்தின் முன்பாக கொண்டுவந்து, மொஹான் பீரிசின் நியமனம் தவறானது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும், அவ்வாறு செய்திருப்பின் பதவியிலிருந்த நீதியரசர் சிறிதளவு சுயமரியாதையுடன் வீட்டுக்குச் சென்றிருப்பார், நிறுவனத்தின் மதிப்பையும் சற்று கவனத்தில் எடுத்திருக்கலாம்.
மேலும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் பதவிக்கு வரும் அடுத்த நீதியரசருக்கும் ஒரு விதமான தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும் என குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசரை பதவி விலக்குவதும் ஷிராணி பண்டாரநாயக்காவை மீண்டும் பதவியில் அமர்த்துவதும் பாராளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக காணப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
A good, quality and intelligent character is there to stay to death ! It won't change
ReplyDeletelike chameleon. But a black sheep can go round wrapped in white for some time
until caught by watchful eyes. This is what happened to MARA the man of your
admiration.Come on the old guard, listen to your new blood JVP.
இதெல்லாம் பிந்திய ஞானோதயம்.
ReplyDeleteஅது இருக்கட்டும், அண்மையில் பிரதமர் ஒரு சொற்பொழிவில் கூறினார்:
'குழந்தைகளைத் தூக்கிப் பார்ப்பதற்கு எனக்கு அவசியமில்லை. அதனைச் செய்து நிறை குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போசாக்கு உணவு வழங்குவதற்கெல்லாம் வேறு அமைச்சு உள்ளது'
இதைத்தான் 'ரணில் மார்க் கிண்டல்' என்பது.