நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் அனைத்திற்கும், பிரதான சந்தேக நபர் மஹிந்த ராஜபக்ஸவே - சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் அனைத்திற்கும் பிரதான சந்தேக நபர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவர் தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையை பின்பற்றக் கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரியளவு குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க வழி தேடித் திரிவதாகத் தெரிவித்துள்ளார்.
மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு லஞ்சம் வழங்கி தப்பிக்கவும் முயற்சிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Very good Mr sambikka don't delay pls
ReplyDelete