காத்தான்குடியில் 'டெங்கு நோய்' தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் மிக வேகமாக பரவிவருகின்ற டெங்கின் பாதிப்பிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களையும் எம்மையும் பாதுகாத்து ஆரோக்கியான சமூக சூழலை கட்டியெழுப்ப இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பேணுவோம்! டெங்கை ஒழிப்போம்! எனும் கருப்பொருளில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 09.02.2015 திங்கட்கிழமை மாலை புதிய காத்தான்குடி 06 ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன் போது டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் எனும் தலைப்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீனும் உடல், உள, சமூக ஆரோக்கியத்திற்கு இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் எனும் தலைப்பில் ஓட்டமாவடி தாறுஸ் ஸலாம் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸ்தபா (ஸலாமி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.
இந்நிகழ்வில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், பொதுச் சுகாதார பரிசோதகர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் பெருந்திரளான பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஜம்இய்யதுந் நிஸா (பெண்கள் அமைப்பு) இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாஷா அல்லாஹ்! எமது முஸ்லிம் பெண்கள் இனவாதக் கும்பல்கள் தலைவிரித்தாடும் எமது நாட்டில் இஸ்லாமிய ஆடையுடன் தத்தம் தனித்துவத்தைப் பேணுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அல்லாஹ் அப்அபணகளுக்கு இஸ்லாத்தில் உறுதியை வழங்குவானாக.
ReplyDelete