Header Ads



அரசியல் வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியமானது - ஜனாதிபதி மைத்திரி

அரசியல்வாதிகள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால், அரசாங்க நிறுவனங்களும் ஊழல்கள் இன்றி சீராக இடம்பெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் ஊழல்களில் ஈடுபடுவார்களாக இருந்தால், அவர்களுக்கு கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களும் ஊழல் மிகுந்ததாகவே காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ், ஊழல்கள் அற்ற ஒழுக்கமான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.