Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி - விசாரணை நடத்தப்பட மாட்டாது

-gtn-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட மாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

படையினர் ஜனாதிபதி அல்லது முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த இருந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இராணுவ அணி வகுப்பின்போது தாக்குதல் நடாத்தத் திட்டமிடபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக என்ற சந்தேகம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள காரணத்தினால் முன் எச்சரிக்கையாக இவ்வாறு சந்தேகப்பட நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகள் வெற்றிகரமான முறையில் எவ்வித தடையும் இன்றி நடைபெற்ற காரணத்தினால் விசாரணைகள் எதுவும் நடத்தப்பட வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.