வடமத்திய மாகாண சபைக்கு, சுதந்திரகட்சி சார்பாக தெரிவாகும் முதலாவது முஸ்லிம் உறுப்பினர்
-பா.சிகான்-
வடமத்திய மாகாண சபை உறுப்பினர் திசானாயக்க மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவ் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினராக ஹொரவபொத்தான ஹூஸைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஹொரவபொதான பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு பிரதேச சபை தலைவராக 2011 வரையும் 2011இல் இருந்து இன்று வரை ஹொரவபொதான பிரதேச சபை உபதலைவராகவும் செயற்படுகின்றார்.
2012ம் ஆண்டு அநுராதபுர முஸ்லிம்களின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவினது வேண்டுகோளிற்கு இணங்க வட மத்திய மாகாண சபையில் போட்டியிட்டு 12070 வாக்குகளினை பெற்று மாவட்டத்தில் 15ம் இடத்தை பெற்று துரதிஷ;ட வசமாக அன்று மாகாண சபை உறுப்பினர் வாய்ப்பை நழுவ விட்டார்.
எல்லாம் வல்ல இறைவன் இன்று அவருக்கு அவ்வாய்ப்பை வழங்கி அநுராதபுர முஸ்லிம்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை வழங்கியுள்ளான்.
ஹொரவபொதானையின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை 1996ல் இருந்து 2001 வரை ஹொரவபொதான பிரதேச சபை தலைவராக இருந்த ஆ.ஊ ரஹூம் அவர்கள் ஆவார். மற்றும் இவரது பாட்டனார் பட்டின சபை தலைவராக இருந்தவர்.
வடமத்திய மாகாண சபைக்கு அநுராதபுர மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சார்பாக தெரிவாகும் முதலாவது முஸ்லிம் உறுப்பினரான இவர் இன்னும் சில தினங்களில் உறுப்பினராக பதவியேற்று அநுராதபுர முஸ்லிம்களுக்கு சேவையாற்றவுள்ளார்.
congratulation
ReplyDelete