விமல் வீரவன்ச, எமது பங்காளியல்ல - நிமல் சிறிபால சில்வா
தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவினை விரைவில் அறிவிப்போம் என எதிர் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் தேசிய அரசாங்கம் தொடர்பாக உடனடியாக பதில் வழங்க முடியாது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அதிகாரத்தினை பெற்றுக்கொண்டால் கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்று கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அறிவிக்க முடியும் எனவும் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதுசரி, குறுந்தாடி துவேச அரசியல்வாதி, தன் மனைவியின் வயதை மறைக்கப்போய் வசமாய் மாட்டிக்கொண்டுவிட்டார்.
ReplyDeleteபிழைக்கத் தெரிந்த நிமால் சிறிபால, இனிமேல் அவரைப்போய் பங்காளி என்பதும் பெற்றோல் கடையினுள் புகைபிடிப்பதும் ஒன்றுதான்.
தேவையென்றால் ஒட்டிக்கொள்வதும் (ஒட்டவிடுவதும்) வாய்ப்புக்குறைந்தால் கழன்று கொள்வதும் (கழற்றி விடுவதும்) அரசியல் ஒட்டுண்ணி (விருந்து வழங்கி) களின் இயல்புகள்தானே..?