மகிந்தவை களமிறக்க, தீவிர முயற்சி
-எம்.ஏ.எம்.நிலாம்-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் பிரயத்தனத்தில் எதிரணித்தரப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மிக விரைவில் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கட்டாயம் தேர்தலில் போட்டியிட முன்வர அழைப்பு விடுக்கவிருப்பதாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ஒருசில வாரங்கள் ஒதுங்கியிருந்த மகிந்த ராஜபக்ஷ கட்சியின் ஆலோசகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் தமது அரசியல் செயற்பாடுகளைத் தொடர முன்வந்திருக்கும் நிலையில் அவரை பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க எதிர்க்கட்சித் தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Post a Comment