கட்டாய மதமாற்ற விவகாரங்களில் மோடி மௌனம் - அமெரிக்க பத்திரிகை கண்டனம்
கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காத்து வருவது கண்டனத்துக்குரியது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தலையங்கம் எழுதியுள்ளது. டெல்லியில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டித்து நியூயார்க் டைம்ஸ் தாய் மதம் திரும்புதல், என்ற பெயரில் இந்துத்துவா நடத்தும் கட்டாய மதமாற்றம், துயோடு விளையாடுவதை போன்றது என கடுமையாக விமர்சித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் அயோத்தியாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்த திட்டமிட்டுள்ள பிரமாண்ட மதமாற்ற நிகழ்ச்சிக்கு எதிராக மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அந்த பத்திரிக்கை வலது சாரி ஹிந்துத்துவாக்களை கட்டுபடுத்தவோ, கண்டிக்கவோ மோடி விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
How can he open the mouth he is the master mind of these organise
ReplyDelete