நேற்று 6 மணித்தியாலம் விசாரிக்கப்பட்ட துமிந்த சில்வா மீது, இன்று மீண்டும் விசாரணை
துமிந்த சில்வா மேலதிக விசாரணைகளுக்காக இன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மேலதிக விசாரணைகளுக்காக இன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஆறு மணித்தியால விசாரணைகளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.
Post a Comment