''57 இலட்சம் வாக்குகளை பெற்ற மஹிந்தவை, பிரதமர் வேட்பாளராக நிறுத்துங்கள்''
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரேரிக்குமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில அரசியல்கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையிடம் வலியுறுத்த தயாராகி வருகின்றன.
இந்தவிடயத்தை தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்று நாளை 09-02-2015 இடம்பெறவுள்ளது.
இதில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் பொது செயலாளர் உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமது வலியுறுத்தல் தொடர்பாக உதய கம்மன் பில HFM செய்திச் சேவைக்கு விபரித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 57 லட்சமான மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளித்திருந்தனர்.
எனவே, அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம்.
அவரை இணைத்துக் கொள்வது மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை புதிய அரசியல் நீரோட்டத்திற்கு இட்டுச் செல்வதற்குமாக ஒரு மக்கள் படையணியை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.
Post a Comment