எகிப்தில் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் மோதல் - 40 பேர் மரணம்
எகிப்து கால்பந்து போட்டி ஒன்றில் அணி ஆதரவாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் நெரிசல் காரணமாக குறைந்தது 40 பேர் கொல் லப்பட்டுள்ளனர்.
எகிப்து இராணுவத்திற்கு சொந்தமான மைதா னத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியை பார்வையிட வந்த ஆதரவாளர்களை கலைக்க பொலிஸார்; கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் தடுப்புகளை பயன்படுத்தியதை அடுத்தே மோதல் வெடித்துள்ளது.
சமலக் என்ற கழக அணி ஆதரவாளர்கள் டிக்கெட் வாங்காமல் அரங்கிற்குள் நுழைய முற்பட்ட போதே பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
"சமலக் கழக ஆதரவாளர்கள் பாரிய எண்ணிக்கையிலானோர் போட்டியை பார்வையிட அரங்கின் நுழைவாயிலை தாண்டி வலுக்கட்டாயமாக நுழைய முயன்றபோது துருப்பினர்கள் அவர்களது தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுத்த னர்" என்று உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைதானத்தில் குறுகலான வாயிலூடாக மாத் திரமே அரங்கிற்கு செல்ல நிர்வாகத்தினர் அனுமதி அளித்ததை அடுத்தே மோதல் வெடித்ததாக சமலக் கழக ஆதரவாளர்கள் தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆதர வாளர்கள் தள்ளுண்டு சென்றபோது பொலிஸ் அதி காரிகள் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் இரப்பர் குண்டு தாக்குதல் நடத் தியதாக ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கலவரம் வெடித்ததை அடுத்து ஏற்பட்ட நெரி சலில் மூச்சுத் திணறியே பலரும் கொல்லபட்டுள் ளனர். காயமடைந்த பெரும்பாலானவர்கள் எலும்பு முறிவு மற்றும் சிறாய்வுக்கு உள்ளாகி இருப்பதாக எகிப்து சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சியை கவிழ்ப்பதில் கால் பந்து கழக அணிகளின் ஆதரவாளர்களும் முக்கிய பங்கு வகித்திருந்தனர். இதனால் பொலிஸார் மற்றும் இந்த ஆதரவாளர்களுக்கு இடையில் முறு கல் நிலை உள்ளது. இவ்வாறான கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அரங்கிற்கு வெளியில் அடிக்கடி மோதல்கள் இடம் பெறுகின்றன.
அதேபோன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கடும் பலப்பிரயோகத்தை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கால்பந்து அணிகளின் ஆதரவாளர் களுக்கு இடையில் ஏற்பட்ட மோத லில் 72 பேர் கொல்லப்பட்டனர்.
Egypt capitol is not bagdhat is cairo bagdhat is iraq capitol
ReplyDeleteஜப்னா முஸ்லிம் செய்திகளில் இப்போதெல்லாம் நம்பகத்தன்மை குறைந்து செல்கின்றது, எந்த ஒரு செய்தியை பிரசுரிக்க முன்னர் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து அச்சரப் பிழைகளை சரி பார்த்த பின்னர் தான் பிரசுரிக்க வேண்டும். இச்செய்தியில் எகிப்தின் தலைநகர் பக்தாத் என்று மாபெரும் பிழையுடன் செய்தியை தரவேற்றம் செய்துள்ளீர்கள். எகிப்தின் தலைநகர் என்னவென்பது செய்தியாளருக்கு தெரியாதா? அல்லது செய்தியாளர் கொடுப்பதை அப்படியே தரவேற்றம் செய்து விடுவீர்களா? இவ்வாறான தவறுகளுடன் செய்தி வெளியிடுவது முதற் தடவையல்ல என்பதை கவனத்தில் கொள்க. பல தடவைகள் வாசகர்கள் இது பற்றி முன்னரும் சுட்டிக் காட்டியுமுள்ளனர்.
ReplyDeletecorrect
ReplyDeleteinnalillahi waina rajoohoon
ReplyDelete