Header Ads



நாட்டில் 399 கோடி வரிமோசடி செய்த இருவரை, மலேசியா சென்று கைதுசெய்த இலங்கை பொலிஸார்

2002-2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற 399 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி வழக்கின் குற்றவாளிகள் இருவர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இரகசிய காவற்துறை குழு ஒன்று மலேசியாவுக்கு சென்று அவர்களை கைது செய்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எட்டு பேருக்கு கடந்த வருடம் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் அவர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநாடுகளில் வசித்து வந்தனர்.

அவர்களில் 280 மற்றும் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. Well done and it shows that a constant legal action will be taken on the culprit politicians who have been hiding in abroad.

    ReplyDelete

Powered by Blogger.