கல்முனை ஸாஹிராவில் 37 வருடங்கள் சேவையாற்றிய ஆசிரியர் ஹமீடு விடைபெற்றார்..!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
41 வருட ஆசிரியர் சேவையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் சுமார் 37 வருடங்கள் சேவையாற்றிய சிரேஸ்ட கணித பாட ஆசிரியர் எம்.பீ.ஏ.ஹமீடு இன்று ( 25.2.2015 ) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
எம்.பீ.ஏ.ஹமீடு ஆசிரியரின் சேவையினை பாராட்டி இன்று கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பெரும் சேவைநலன் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட எம்.பீ.ஏ.ஹமீடு ஆசிரியர் முகைதீன்பாவா ஆதம்பாவா , அவ்வா உம்மா தம்பதிகளின் 4வது புதல்வராக 26.02.1955 இல் பிறந்தார். தனது வாழ்க்கை துணைவியாக ஜனாபா ஏ.ஆர்.எல்.சுபைதா அவர்களை 10.11.1989 இல் திருமணம் செய்தார். இவருக்கு ஏ.எச்.சரோத் ஜஹான் , ஏ.எச்.சரோத் அஸ்மதுல்லாஹ் , ஏ.எச்.ஸரோத் நஜிமுன்னிஸா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சையை 1974 ஏப்ரலில் எழுதிய இவர் பரீட்சை முடிவடைந்தததும் ஆசிரியர் நியமனத்திற்காக 1.04.1974 இல் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினார்.
இந்நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டதால் 23.04.1974 இல் ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்று ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டார்.
23.04.1974 இல் சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று ஒரு வருடம் அங்கு சேவையாற்றியதன் பின்னர் 1975 , 1976 ஆகிய இரு வருடங்களிலும் மருதமுனை லெ் மனார் மத்திய கல்லூரியில் சேவை புரிந்தார்.
1977 , 1978 ஆகிய ஆண்டுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் சேவை புரிந்து 1979 , 1980 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியிலும் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கற்பித்தல் பயிற்சியினையும் மேற்கொண்டு 1981 இல் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒரு வருட கால கற்பித்தல் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
1.1.1982 இல் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பயிற்றப்பட்ட கணிதப் பாட ஆசிரியராக இணைக்கப்பட்ட இவர் இன்றுவரை இக்கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகவும் மதிக்கத்தக்க ஒரு சிறந்த ஆசானாக 37 வருட காலம் திகழ்ந்து வருகின்றார்.
இக்கால கட்டங்களில் தரம் 6 முதல் 11 வரை பிரதி பகுதித்தலைவராகவும் , பகுதித்தலைவராகவும் , கணித பாட பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளதுடன் , சுமார் 20 வருடங்கள் க.பொ.த.சாதாரணதரப் பிரிவிற்கு பிரதி பகுதித்தலைவராகவும் , பகுதித்தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் , பகுதித்தலைவர்களான அல்ஹாஜ். எம்.எச் ஆதம் ( ஓய்வுபெற்ற சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் ) , மர்ஹும் யு.எல்.எம்.சரீப் , அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட் ( ஓய்வு பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்) ஆகியோருடன் மிகச் சிறப்பாக பிரதி பகுதித்தலைவராகவும் பணி புரிந்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் க.பொ.த.சாதாரணதரப் பிரிவு பல்துறைகளிலும் வீறுநடை போட்டுச் சென்றதனை எவராலும் மறக்க முடியாது.
இக்கால கட்டத்திலேயேமுதல் தடவையாக மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.மேலும் களப்பயணங்கள், கல்விச்சுற்றுலாக்கள் , இல்ல வினையாட்டுப் போட்டி போன்றவற்றிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்று மிகவும் சிறப்பாக செயற்பட்டதுடன் , மாணவர்களிடையே மறைந்து கிடைந்த திறமைகளை வெளிக்காட்டுவதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
கணித பாடத்திற்கான விடைத்தாள் மதிப்புிட்டு உதவி பரீட்சகராகவும் , பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றி அந்த அனுபவத்தினூடாக மாணசர்களின் கணிதபாட மேம்பாட்டிற்கு முன்னின்று உழைத்தார்.இவ்வரிய உழைப்பின் விளைவாக இன்று இலங்கையிலும் கடல்கடந்த நாடுகளிலும் பல்துறைசார் விற்பன்னர்களாக இவ்வாசிரியரின் மாணவர்கள் இருப்பதோடு குறிப்பாக பல ஆசிரியர்கள் , சில பாடசாலை அதிபர்கள் இவரிடம் கணிதபாடம் படித்த மாணவர்களாக இருப்பது இந்த சந்தர்பத்தில் இரட்டை மகிழ்வினை தருகின்றது. இது இவ்வாசிரியருக்கும் இக்கல்லூரிக்கும் கிடைக்கும் பெரும் மகுடமாகும்.
37 வருடங்களில் பாடசாலையின் பல்வேறுபட்ட குழுக்களுடன் இணைந்து முகாமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இப்பாடசாலை பல்துறைகளிலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் புகழை ஈட்டுவதற்கு இவ்வாசிரியரின் பங்களிப்பு எல்லாச் சந்தர்ப்பத்திலும் கிடைத்துள்ளது.
இவரது மூத்த சகோதரர் எம்.பீ.அஹமதுலெவ்வை ( ஓய்வுபெற்ற அதிபர்) , இக்கல்லூரியில் சில வருடங்கள் இஸ்லாம் பாடம் கற்பித்து பின்னர் விரிவுரையாளராக கடமையாற்றிய இரண்டாவது சகோதரர் மர்ஹும் எம்.பீ.ஆதம்பாவா மௌலவி ( பீ.ஏ.) மற்றும் இக்கல்லூரியில் 16 வருடங்கள் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கடமையாற்றி அட்டாளைசடசேனை கல்வியியல் கல்லூரியில் சேவையாற்றிய மூன்றாவது சகோதரர் மர்ஹும் எம்.பீ.அப்துல் மஜீட் ( லேப் மஜீட் ) ஆகிய இவரது சகோதரர்களும் இக்கல்லூரியின் கல்வி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
இவரது ஆசிரியர் சேவைக்காலத்தில் இடம்பெற்ற 23.11.1978 சூறாவளி , 26.12.2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது இவ்வாசிரியரின் வீடு மற்றும் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இவ்வாசிரியர் 18 வயதில் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட காரணத்தினால் ஆசிரியர் சேவையில் 4 தஸாப்தங்கள் கால்பதித்து இன்றுடன் 41 வருடங்கள் கழிந்து விட்டன.
இந்த 41 வருடங்களில் 37 வருடங்கள் இக்கல்லூரியில் அருங்சேவையாற்றியமையை நினைவு கூர்ந்து மனமகிழ்வுடன் எல்லாம்வல்ல இறைவன் இவ்வாசிரியருக்கு மேலும் ஆரோக்கியமான வாழ்வையும் நீடிய ஆயுளையும் வழங்க பிராத்திப்போமாக.
”ஏணியாய் செயல்பட்டு மாணவர்களை உயர்த்துவதும், தோணியாய் செயற்பட்டு மாணவர்களை கரை சேர்ப்பதும் , அண்ணாவியாய் மாணவர்களை அரங்கேற்ற வைப்பதும் ஆசிரியர்களுக்கு உயர்ச்சி இல்லாவிட்டாலும் இறைவன் என்றும் ஆசிரியர்களுக்கு உயர்ச்சியினை தருவான்.”
ஐயா,
ReplyDeleteஎனது நண்பர்களில் சிலர் உங்களது மாணவர்கள். அவர்கள் உங்களது செய்தியறிந்து பழைய நினைவுகளை மீட்டியதில் எனக்கும் உங்கள் சேவையின்பால் உயர்வான எண்ணம் பிறந்தது.
அதனால் நானும் அவர்களோடு இணைந்து உங்கள் நிம்மதியான ஓய்வு வாழ்வுக்காக வாழ்த்துகின்றேன்.
நான் விஞ்ஞானத் துறையில் முதுமானிப் பட்டம் பெற்றவன் (you may think i am saying with agree therefore i gave this self introduction) இம்மனிதரின் கற்பித்தல முறையூம் நிறுவாகமும் சரியில்லை பிள்ளைகளைத் தண்டிக்கும் விதம் மிகவூம் கொடுரமானது ஆனால் இவரின் மற்றைய சகோதரர்கள் அதிலும் விசேடமாக மௌலவி சிறந்த நபராக வாழ்ந்தார்கள் இருந்தும் ஆசான் என்ற வகையில் கௌரவிக்கின்றேரம் குறிப்பு இவரின் சாதாரரண நடவடிக்கைகளும் மார்க்கத்திற்கு முறனானதாகும் (நாங்கள் படித்த காலத்தில் 1994க்கு முதல்) எனவே இனியாவது சேர் இவைகளை மாற்றினால் நல்லது அல்லாh உங்களுக்கு நேர்வழியைக் ககாண்பிப்பானாக
ReplyDelete