இலங்கையிலிருந்து ஹஜ் செல்லவுள்ளவர்களின், எண்ணிக்கையை 300 மாக உயர்த்த நடவடிக்கை
-எம்.ஏ. அமீனுல்லா-
இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ளவர்களின் எண்ணிக்கையை மூவாயிரமாக உயர்த்த முஸ்லிம் கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் துரித நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
கடந்த வருடம் கோட்டா முறையில் 2 ஆயிரத்து 200 பேருக்கு புனித ஹஜ் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தமது ஹஜ் கடமைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையேற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். அரசியல் மட்டத்திலும் தனியார் அமைப்புகளுமாக இரண்டு வகையான குழுக்களை அமைத்து அதன் மூலம் ஹஜ் கடமைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும்.
மேலும் குறிப்பாக புனித ஹஜ் கடமைகளை மேற்கொள்ள செல்லும் ஹஜ்ஜாஜ்ஜிகளுக்கு எந்தவொரு அசெளகரியங்களும் ஏற்படாத வண்ணம் முறையான தொரு வழிகாட்டல்களையும் பெற்றுக் கொடுக்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் மேலும் குறிப்பிட்டார்.
முதலாவது உம்ராவுக்கு கூடிட்டிடு பெட்டு ஏற் போர்ட்ல air port விட்டுட்டு போனவங்கள பிடிக்க ஒங்களுக்கு தய்ரியம் இல்ல ,அதுல எண்ணம் 300 பெற வேற கொண்டு போய் நடு ரோட்டுல விட போறான்கள்
ReplyDelete