பௌத்த இனவாதிகளுக்கு 30 ஆசனங்களை, பெற்று கொடுக்கப்போகும் முஸ்லிம்கள்..!
(J.M.Hafeez)
பெருமை என்பது ஒரு மனிதனுக்கு வரக் கூடாதது. பெருமையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற பலர் அழிந்த சம்பவங்கள் பல உண்டு. அல்லாஹ்விடம் காணப்படும் பண்புகளை அவன் படைப்புக்கள் பங்கு போட முடியாது. இது நியதி. அந்த நியதியை மறந்த பலர் அழிந்த வரலாறு இன்றும் படிப்பிணையாக உள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மேற்படி சம்பவத்தை ஒப்பிடும் போது அதில் பல படிப்பிணைகள் உள்ளன. அதில் ஒன்றை மட்டும் இங்கு தொட்டுக் காட்டுவது நல்லது. அதுதான் மிகச் சுருக்கமாகச் சொன்னால் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பது. அது எப்படி என்று கேட்காதீர்கள். அல்லாஹ் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுப்பான். நாடாதவர்களிடமிருந்து பறித் தெடுப்பான் என்ற நம்பிக்கை இருக்குமாயின் சற்று சிந்தியுங்கள்.
நாம் பல்வேறு மக்களிடம் மேலோட்டமாகக் கதைத்தோம். அதில் வடபகுதி மக்களைக் கேட்டால் அவர்கள் கூறிய பதில் எமது வடபகுதி வாக்குகள்தான் முன்னைய ஜனாதிபதியை தோல்வியடைச் செய்தது என்றனர். கிழக்கு மாகாண தமிழ் மக்களைக் கேட்டபோதும் அவர்களும். இதே பதிலைச் சொன்னார்கள். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அதனை விடவும் ஒரு படி முன் சென்று நாமே அனைத்தையும் மாற்றி அமைத்தோம் என்றார்கள். மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களிடம் கேட்டபோதும் அதே பதில் கிடைத்தது. நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மேலதிவாக்குகள் கிடைத்தன என்றனர். கண்டி மாவட்டத்திலும் இதே பதில். கண்டி, கொழும்பு போன்ற இடங்களிலுள்ள முஸ்லிம்கள் 'நாம் எல்லாவற்றையும் சாதித்து விட்டோம'; என்ற இருமாப்பு எய்துவதைக் காண முடிந்தது. இரண்டு முஸ்லிம்கள் சந்தித்தால் அவர்கள் கதைக்க வேண்டிய விடயம் மறுமையைப் பற்றி அல்லது மரணத்தைப் பற்றி என்பார்கள். ஆனால் இன்று ஆட்சி மாற்றம் எற்படுத்தியவர்கள் நாம்தான் என்ற ஆணவப் பேச்சுக்கு குறைவே இல்லை.
நமது நாட்டில் ஆகக் கூடினால் பத்து அல்லது பதினைந்து இலட்சம் முஸ்லீம்வாக்குகள் இருக்கமுடியும். ஆனால் வெற்றி பெற்றவர் பெற்றவாக்கோ 61 இலட்சம். அப்படியாயின் இது சாத்தியப் படுமா? இன்னும் சிலர் மேற்கூறிய கருத்தை ஏற்றாலும் இன்னொரு புதுக்கதையையும் கூற மறுப்பதில்லை. எமது பள்ளிகளில் கைவைத்ததால் ஏற்பட்ட தோல்வி என்கின்றனர். கலுத்துறை மக்களோ எமது வீடுகளைத் தாக்கி ஆறுமாதம் செல்ல முன் ஆட்சி கவிழ்ந்தது என்கின்றனர். யாழ்பாண மக்களோ எமது நிம்மதியைக் கெடுத்தவனின் நிம்மதியை கடவுள் கெடுத்து விட்டார். ஆரசன் அன்று கேட்பான். கடவுள் நின்று கேட்கும். அதுதான் நடந்துள்ளது என்கின்றனர். இப்படி பலதரப்பட்ட மக்களும் தமக்குத் தாமே புகழாரம் சூடிக்கொள்கின்றனர்.
இலங்கையில் உள்ள அனைத்தும் சிறுபான்மை மக்களும் மைந்திரிப்பால சிரிசேனாவிற்கு வாக்களித்திருந்தாலும் அது 61 இலட்சத்தை அடைய முடியாத போது நாம்தான் தோற்கடித்தோம் என்று எப்படிக் கூற முடியும். ஆனால் நாட்டில் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு, கண்டி என்று எல்லாப் பகுதிமக்களும் வேறு படுத்திக் காட்டும் விதத்தில் வாக்களித்திருந்தனர். தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பாரிய வித்தியாசம் தெரிந்தது. முஸ்லீம் பிரதேசங்களில் அதனைவிடவும் கூடிய அளவில் வித்தியாசம் தெரிந்தது. ஆனால் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பாரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும் வித்தியாசப் படவேண்டிய இடைவெளி குறைந்து காணப்பட்டது. சுருங்கக் கூறின் சாராசரியாக அவர்கள் வாக்களிக்க, சிறுபான்மையினர் சற்று ஒருபுறம் பாராமாக இருக்கும் வகையில் வாக்களித்தனரே தவிர 100 சதவீதம் நாம் என்று உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் சிங்கள மக்களில் இன்னும் 3 இலட்சம் மக்கள் மறுபக்கம் வாக்களித்திருப்பின் வெற்றி பெற்றவருக்கு அந்த 3 இலட்சம் குறையும் போது தோல்வியடைந்தவருக்கு 3 இலட்சம் அதிகரிக்கும். அப்படியாயின் 57 இலட்சம் பெற்றவர்; 60 ஆக உயர, 61 இலட்சம்பெற்று வெற்றி பெற்றவரின் வாக்குகள் 58 ஆகக் கீழ் வந்திருக்கும். எனவே 3 இலட்சத்திற்கும் குறைவான மக்களின் அபிப்பிராயத்தை வைத்தே எல்லாம் நடந்து விட்டது.
110 இலட்சம் வாக்களர்களில் 3 இலட்சம் என்பது வெறும் 3 சதவீதமே. 100 பேரில் 3 பேரை மாற்றுவது பெரிய காரியமல்ல. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட மறைமுக சக்தியான ஒன்று தொழிற்பட்டதை இறை நம்பிக்கை அற்றவர்களும் சிந்திக்கும் சந்தர்ப்பமாகும்.
அதேபோல் தேர்தல் நடந்து மறுநால் அதிகாலை வெளியான செய்திகளின் அடிப்படையில் ஒரு சதி நடக்க இருந்ததாகவும் அதற்கு சிலர் விருப்பம் தெரிவிக்க வில்லை என்பதும் பரவலாகப் பேசப் படும் விடயம், எனவே அவர்களது உள்ளத்தை மாற்றியர் யார்? உள்ளங்களை மாற்றும் சக்தி யாருக்கு உண்டு? சதிப்புரட்சிக்கு இனங்காது அல்லது தேர்தல் ஆணையாளரின் தைரியமான முடிவிற்குவர யார் காரணம்?
பின்னர் நடந்த வற்றைப் பாhக்கும் போது இன்னும் சில அதிசயங்கள் வெளியாகின்றன. 50 கோடி பணத்தை கை விட்டு விட்டுச் சென்றதாகவும், எத்தனையோ பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு அகப்ட்டுள்ளமை, ஆயுதக் களஞ்சியம், பதுக்கிவைத்த வாகனங்கள், ஊழல் மோசடிகள் போன்றவை அவர்கள் தோல்வியை எதிர் பாhத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்துகிறது.
எனவே இறைவன் நாட்டப்படி ஒரு சாம்ராஜ்யம் சரிந்ததே தவிர நாம் மாற்றி அமைக்க வில்லை. ஆனால் அதற்கான முயற்சியின் பங்காளர்கள் என்று மட்டுமேதான் கூறமுடியும். இதனை விட்டு விட்டு நாம்தான் மாற்றினோம் என்று பெருமை அடித்தால் பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். முதலாவதாக பெருமை என்பது அல்லாஹ்விடம் உள்ளது. அதில் நாம் பங்குகொள்ள முடியாது. அப்படி பெருமை அடிப்போமாயின் இறை தண்டனைக்குப் பயந்து கொள்ளவேண்டும்.
அடுத்ததாக நாம்தான் மாற்றினோம் என்ற அகங்காரப்பேச்சு காரணமாக பேரினவாதிகள் விழித்துக் கொண்டார்கள். நுகேகொடையில் நடந்தது அதுதான். நாம் வீராப்புப் பேசப்பேச இன்னும் பல நுகேகொடைக் கூட்டங்கள் உருவாகும். இன்னும் பல ஞான, சார, உதய, பலசேனா, வன்ச.... என்று உருவாகலாம். நாம் பொறுமைகாத்து அல்லாஹ்மீது யாவற்றையும் சுமத்துவோமாயின் அவன் அதனைப் பாhத்துக் கொள்வான். தேவையற்ற விதத்தில் நாம் வாய் வீராப்புப் பேசினால் விளைவு கடுமையாக இருக்கும் என்பதற்கு நுகேகொடையில் கட்டியம் கூறிவிட்டார்கள். எம்மவர் சிலர் மூக்குடைந்து போய்விட்டார்கள். அது இறுதியில் எமது சமூகத்தையே தாக்கும். 5000 பேரைத் திரட்ட முடியாது என்றனர். நாம் அதற்கு மேல் பல மடங்கு திரட்டி விட்டோம் என்று கூறுகின்றனர். 'இது அரசியல் கூட்டமல்ல, அது இனவாதம் பேசி கொண்டு வரப்பட்ட துவேசக் கூட்டம்' என்று நாம் எமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இன்னும் பல மடங்கு இனவாதம் பேசி இதே வேளையைத் தொடர்ந்து செய்ய நாம் காரணமாகி விடக்கூடாது. எனவே இங்கு மறைந்துள்ள ஒரு உண்மைதான் அது அல்லாவின் சக்தியைக் கொண்டுதான் நடந்ததே தவிர மேடையில் வீரவசனம் பேசியவர்களால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு மறைந்துள்ள உண்மையைப் புரிந்து கொண்டால் தோல்வியடைந்த மகிந்த மீண்டும் வர முடியாது. அதனைப் புரியாது நாம் எதையோ கூறித்திரிவோமாயின் அவர் மீண்டும் வருவது சாத்;தியமாகலாம் என்பதையே கூறவிரும்புகிறோம்.
இன்னும் இரண்டு மாதங்களில் பாராளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்படுகிறது. அப்படி நடந்தால் தற்போதைய நிலையில் நாம் எதிர்பார்பதே நடக்கும் என்பதற்கு என்ன நிச்சயம். இது தனித்தலைப்பில் ஆராயப்பட வேண்டியது.
ஆனால் ஒன்று மட்டும் நடக்கலாம் என யூகிக்க மட்டும் முடியும். அதூன் ஆகக் கூடுதலாக ஆசனங்களைப் பெறும் கட்சி பிரதமரையும் அதற்கு அடுத்தபடியாக அதிக ஆசனங்களைப் பெரும் கட்சி பிரதிப் பிரதமரையும் நியமிக்கும் தேசிய அரசு என்ற ஒரு பூச்சாண்டி காட்டப் படுகிறது. அப்படியாயின் தற்போது மாறிமாறி அதிகாரததிற்கு வரும் இரண்டு கட்சிகளுமே தங்களுக்கிடையே பிரதமரையும், பிரதிப் பிரதமரையும் பகர்ந்து கொள்வர். உதாரணமாக தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி 150 ஆசனங்களையும் மற்ற எதிர்கட்சி 30 ஆசனத்தையும் ஏனைய கட்சிகள் 29 லும் குறைவாகன ஆசனங்களையும் பெற்றதாகக் கொண்டால் சிறுபான்மைகளின் உரிமை பற்றிப் பேசும் கட்சிகள் ஒரு சில ஆசனங்களுடன் எதிரணியில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதனை தட்டிக் கேட் யாரும் இருக்க மாட்டார்கள். பேரினவாதம் பேசி குறைந்த ஆசனங்களாக இரண்டாம் இடத்தை தக்கைவைத்தாலும் பிரதிப் பிரதமர் நிச்சயம் உண்டு. எனவே ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசனுக்கு இனத்துவேசம் பேசி 30 மேற்பட்ட ஆசனங்களைப் பெறமுடியாத நிலை ஏற்பட வேண்டுமாயின் எமது செயற்பாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ளும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.
ஏனென்றால் கள்வனும் காவற்காரனும் சேர்ந்தால் விடியும் வரை திருட முடியும். காட்டிக் கொடுக்க யாரும் இல்லை. எல்லாம் அவர்களே. இந்நிலை வெறுமனே உருவாகாது அல்லாஹ் காப்பாற்றுவான். ஆனால் நாம் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து வீராப்பு வசனங்களைக் குறைத்து நடந்த முடிந்த மாற்றத்திற்கு சகலரும் பங்காளிகள் என்பதை ஏற்றுக் கொண்டால் யாவும் நல்லதாக முடியலாம். நாம்தான் மாற்றினோம் என்ற ஆணவப் பேச்சில் சென்றோமாயின் அதன் பின் ஏற்படக் கூடிய அனைத்து தீய விளைவுகளுக்கும் நாம்தான் காரணம் என்ற வீண் பழியையும் சுமக்கவேண்டி வரும். அல்லது நுகேகொடைப் பாணியில் தீய சக்திகள் இணைந்து மாற்றி அமைத்துக் காட்டவும் முயற்சிப்பர்.
எனவே பெருமையோ புகழ்ச்சியோ எமக்குத் தேவையில்லை. எமது கடமை முடிந்தது. மீண்டும் தேவை வரும் போது எமது கடமையை நிறைவேற்ற வேண்டுமே ஒழிய நாம்தான் காரணகர்த்தா என்ற இருமாப்பை விட்டுவிடுவோம்.
இக்கட்டுரையாளரின் கருத்துப்படி நாம் நடக்கத்தயார் இனவாதிகள் நிறுத்துவார்களா? கடந்தகாத்தில் நாம் வாய் பொத்தி இருக்க இருக்க அதிகரித்ததே அன்று குறைந்தாக இருக்கவில்லை உலகில் முதன் துறையான அல்லாh விற்கு பன்றி உருவத்தில் பொம்மை கட்டி எரித்தான்கள் பாவிகள் அப்போதும் நாம் பொறுத்திருந்தோம் இதைவி ட எவ்வாறு பொறுமை காப்பது? தற்போது சிறிதளவூ அடங்கினார்கள் என்றால் அல்லாh வின் உதவியால் நாம் செய்த எதிர் பிரச்சாரங்களும் சர்வதேச சமுகமும் தான் அடங்கிப் போனதால் அல்ல நீங்கள் அறிஞராக இருக்கலாம் ஆனால் உங்களின் இக்கருத்து சமுகத்தின் பின்னடைவிற்கே வழிவகுக்கும். கடமை முடிந்தது என்றால் உங்கள் எதிர்பார்ப்பு என்ன முஸ்லிம்கள் விலகி நிற்க வேண்டுமா? அல்லது பணிந்து செல்ல வேண்டுமா? என்ன சொல் வருகின்றீர்கள் புரியவில்லை
ReplyDeleteஇக்கட்டுரையாளரின் கருத்துப்படி நாம் நடக்கத்தயார் இனவாதிகள் நிறுத்துவார்களா? கடந்தகாத்தில் நாம் வாய் பொத்தி இருக்க இருக்க அதிகரித்ததே அன்று குறைந்தாக இருக்கவில்லை உலகில் முதன் துறையான அல்லாh விற்கு பன்றி உருவத்தில் பொம்மை கட்டி எரித்தான்கள் பாவிகள் அப்போதும் நாம் பொறுத்திருந்தோம் இதைவி ட எவ்வாறு பொறுமை காப்பது? தற்போது சிறிதளவூ அடங்கினார்கள் என்றால் அல்லாh வின் உதவியால் நாம் செய்த எதிர் பிரச்சாரங்களும் சர்வதேச சமுகமும் தான் அடங்கிப் போனதால் அல்ல நீங்கள் அறிஞராக இருக்கலாம் ஆனால் உங்களின் இக்கருத்து சமுகத்தின் பின்னடைவிற்கே வழிவகுக்கும். கடமை முடிந்தது என்றால் உங்கள் எதிர்பார்ப்பு என்ன முஸ்லிம்கள் விலகி நிற்க வேண்டுமா? அல்லது பணிந்து செல்ல வேண்டுமா? என்ன சொல் வருகின்றீர்கள் புரியவில்லை
ReplyDeletewell...really well advises.....
ReplyDeletevery good speach.
ReplyDelete