3 பேர் சேர்ந்து குழந்தை பெறுதல் - 2016 இல் முதல் குழந்தை பிறக்குமாம்..!
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக பிறப்பதற்கும், வளர்வதற்கும், தாயிடமிருந்து கிடைக்கும் 'மிட்டோசோண்டிரியா' என்ற நுண்ணிய இழைமணி தான் முக்கிய காரணமாகும். மனித உடலில் உள்ள செல்களில் மிக நுண்ணிய அளவில் இருக்கும் இந்த நுண்ணிய இழைமணி நாம் உண்ணும் உணவை சக்தி வாய்ந்த ஆற்றலாக மாற்றுகிறது.
இந்த நுண்ணிய இழைமணி நலிவடைந்து காணப்பட்டால் இதயத்துடிப்பையும், மூளையின் செயல்பாட்டையும் வெகுவாக பாதிக்கும்.
இந்த நுண்ணிய இழைமணியானது தாயின் கருமுட்டையிலிருந்து குழந்தைக்கு கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் தாயின் இழைமணியானது நலிவடைந்திருந்தால், அக்குழந்தை நோயுள்ளதாகவும், கண்கள் குருடாகவும், தசைகள் சோர்வடையவும், இருதயம் பலவீனமடையவும் காரணமாகின்றன. எனவே குழந்தை நோயில்லாமல் பிறப்பதற்கும், வளர்வதற்கும் ஏதுவாக ஐ.வி.எப். தொழில்நுட்பம் மூலம், மூன்றாவது நபரின் கருமுட்டையில் இருந்து கிடைக்கும் சக்தியுள்ள இழைமணிகளை தாயின் கருமுட்டையில் சேர்க்க பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். இம்முறையில் வரும் 2016 ஆம் ஆண்டு உலகின் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இம்முறையை பயன்படுத்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் உயரிய பிரதிநிதிகள் சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
Post a Comment