Header Ads



நீரிழிவு நோயால் இறக்கும் வாய்ப்பு ஆண்களை விட, பெண்களுக்கு 2 மடங்கு அதிகம்

நீரிழிவு நோயால் இறக்கும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகம் என தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட சர்க்கரை நோய் (நீரிழிவு) இப்போது சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயில் முதல் வகை நோய் டைப் 1 டயாபடீஸ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வருவது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில்லை. உலக அளவில் 15 வயதிற்குட்பட்ட 5,00,000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2013-ம் ஆண்டு சர்வதேச டயாபடீஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வின்படி முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களோடு ஒப்பிடும்போது நோயுற்று இறப்பதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோயின் தாக்கத்தால் வாதம் வருவதற்கு 37 சதவீதமும் கிட்னி கோளாறுகளுக்கு 44 சதவீதமும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. மேலும் இதய நோயால் இறக்கும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மோசமான ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் சிகிச்சையில் உள்ள சிரமங்கள் போன்ற காரணங்களால், பல பெண்கள் இதய நோய் தொடர்பான மரணங்களை சந்திப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.