Header Ads



சீனி என நினைத்து, யூரியா பசளையை தேநீரில் கலந்த மாணவர்கள், 27 பேர் பாதிப்பு, நீர்கொழும்பில் சம்பவம்

-tm-

நீர்கொழும்பு, தொன்பொஸ்கோ கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் 27பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த பயிற்சி நிலையத்தில் நேற்று மாலை வழங்கப்பட்ட தேநீரை அருந்திய பின்னரே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். சீனி என்று எண்ணி யூரியா பசளையை தேநீரில் கலந்தமையினாலேயே அதனை அருந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் மேலும் கூறினர். 

No comments

Powered by Blogger.