2,500 ரூபா சம்பள உயர்வு கேட்டு, கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட தனியார் துறையினருக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நாளை வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாளை மாலை 4 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்க ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள தொழில் வழங்குநர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள போதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் கட்டுப்படவில்லை.
இதனால் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்ட மூலமொன்றை நிறைவேற்றி அதனூடாக இந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் துறை தொழிற் சங்கங்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment